Friday, March 1, 2013

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!



குறைந்து வரும் மழையளவு, அழிக்கப்படும் காடுகள், குறைந்த முதலீட்டில் தண்ணீரை கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகள், இயற்கையை அழித்து பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என நம்பும் இன்றைய நவ நாகரீக மக்களுக்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை 1992 ஆண்டு முடிவெடுத்து 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும்  மார்சு மாதம் 22 ஆம் தேதியை உலக நீர் நாளாக அறிவித்து பல்வேறு கருபொருட்ளில் உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. 1994 தொடங்கி 2013 வரை நடந்த விழிப்புணர்வு கருபொருட்களை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

9 comments:

கோவை நேரம் said...

இந்த மாதம் கண்டிப்பாய் கொண்டாடலாம்...

வின்சென்ட். said...

மிக்க நன்றி.

கோமதி அரசு said...

1994 தொடங்கி 2013 வரை நடந்த விழிப்புணர்வு கருபொருட்களை தொகுத்து உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முடிந்தால் உங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். //

கண்டிப்பாய் எங்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வேன்.
சிறு அணில் போல் நானும் உங்களுக்கு ”’தண்ணீர் சிக்கன வேண்டும் இக்கனம் ’’ என்று எழுதி அனுப்பிய நாட்களை நினைத்துக் கொள்கிறேன்.

மழை இல்லாமல் பயிர்கள், கால்நடைகள் வாடுகின்றன. மனிதனும் தவிக்கிறான்.
மழைக்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பதிவுகள் மகத்தானது. மார்ச் 22 அன்று தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்பட பாடு படுவோம்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. இந்த வருடமும் அது போன்றதொரு தொகுப்பு அவசியம் என்று தோன்றுகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக பகிர்கிறேன்...

மிக்க நன்றி...

sakthi said...

நீரின்றி அமையாது உலகு ! கண்டிப்பாக நீரை சேமிக்க பாடுபடுவோம் !

வின்சென்ட். said...

திரு. திண்டுக்கல் தனபாலன்
திரு. சக்தி

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

பூ விழி said...

மின்சாரமில்லாமல் கஷ்ட்ட படும் இந்த தருணத்திலாவது மக்கள் மனம் விழித்து கொள்ளட்டும் தண்ணீரை காப்போம் தன்னிலையையும் காப்போம் இது தேர் இழக்கும் வேலைமட்டுமல்ல தனிமனிதனின் ம்னவிழிப்பும் தேவை

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.