Friday, March 15, 2013

கரும்பு ..........ஒரு கையேடு



 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சமீபத்தில் "கரும்பு ஒரு கையேடு' என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
   
 இருபத்தியோரு அத்தியாயங்கள் அடங்கிய இக்கையேட்டில், இரகங்கள், சொட்டு நீர்ப் பாசனம், வெல்லம் தயாரித்தல், இயந்திரங்கள், களை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை போன்ற கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

        இது தவிர, ஆறு அத்தியாயங்கள் விவசாயிகளின் உடனடிப் பார்வைக்கான  பயனுள்ள பல தகவல்களை (ready-reckoner type information) அளிக்கின்றன. தமிழக சர்க்கரை ஆலைகளின் தொடர்புத் தகவல்கள், விவசாயிகளுக்கான கடனுதவி, காப்பீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், கரும்பு விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களுக்கான பிரத்தியேக இணையதளமான கேன் இன்போ குறித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
     
 இது தவிர, கேன் இன்போ இணையதளத்தின் ' வல்லுனரைக் கேளுங்கள் " பகுதியின் சில கேள்வி பதில்கள் 'பெட்டிச் செய்திகளாக ' இடம் பெற்று, இக்கையேட்டை ஒரு முழுமையான தகவல் பெட்டகமாகுகின்றன.

      விவசாயிகள் மட்டுமின்றி விரிவாக்கப் பணியாளர்களுக்கும் , மாணவர்களுக்கும் இக்கையேடு பெரும் பலனளிக்கும்.
     கூடுதல் விவரங்களை , www.caneinfo.nic.in இணைய தள முகவரியில் பெறலாம்.
ரூ. 200 மட்டுமே  (தபால் செலவு உட்பட )
பிரதிகளுக்கு:-
 Director, Sugarcane Breeding Institute என்ற பெயருக்கு கோவையில் ஏதேனுமொரு வங்கியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை (DD) எடுத்து
இயக்குனர்,
கரும்பு இனபெருக்கு நிலையம் ,
கோவை 641 007
என்ற முகவரிக்கு  அனுப்புங்கள். 

No comments: