Saturday, February 23, 2013

விரைவாக மரங்களை உருவாக்கும் திரு.அர்ஜுனன்.


திரு.அர்ஜுனன்.
அண்மையில் கோவையில் நடைபெற்ற மரமேளாவில் மரங்களை கிராமம் கிராமமாக வினியோகம் செய்யும் அசாதாரண மனிதர் ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். திருநெல்வேலி விருதுநகர் தொடர் வண்டிகளில் டீ, காபி வியாபாரம் செய்த 42 வயது நிரம்பிய திரு.அர்ஜுனன். தனது மகனின் மறைவால் தவித்துக் கொண்டிருந்தவருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்த பெரியவர் ஒருவர் முற்பிறவி பாவம், இப்பிறவி தவறுகள் மரங்களை நட்டால் மன்னிக்கப்படும் என்று கூற, சரியெனப்பட்டதால் தீவிரமாக சற்று வித்தியாசமான மரவளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். விதை மூலம் மரமாக வளர பல ஆண்டுகள் ஆகும். ஆனால் 6 அடி மரக்கிளைகளை வெட்டி (போத்துமுறையில்),  ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி மரங்களாக உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் திரு.அர்ஜுனன்.  விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நடப்படுவதால் 90 நாட்களிலேயே நிழல் தரும் மரமாக வளர்ந்து தனது பணிகளைச் செய்கிறது. கிராம பஞ்சாயத்துகள் மூலம் வேர் விட்ட மரபோத்துக்களை கிராமங்களுக்கு இலவசமாகக் கொடுக்கவும் தனிநபர்கள் என்றால் பயிற்சி தர தயாராக இருப்பாதாகவும் கூறுகிறார் திரு.அர்ஜுனன். இயற்கை சேவையில் ஈடுபட்டிருக்கும் இவரை பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சி கொள்வதோடு இவரை பயன்படுத்தி மேலும் தமிழகத்தை பசுமைபடுத்த உங்களை கேட்டுக் கொள்ளுகிறது.

தொடர்புக்கு :
திரு.அர்ஜுனன்
அலைபேசி: 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com

13 comments:

கோமதி அரசு said...

திரு அர்ஜுனன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு மன ஆறுதலையும் பூமி தாயுக்கு மழையை கொண்டு வரும் முயற்சிக்கும், அவர் பணியை வாழ்த்துவோம்.
அர்ஜுனன் அவர்கள் வாழ்க வளமுடன்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நடப்படுவதால் 90 நாட்களிலேயே நிழல் தரும் மரமாக வளர்ந்து தனது பணிகளைச் செய்கிறது. ///

திரு.அர்ஜுனன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

பகிர்கிறேன் ஐயா... நன்றி...

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

Unknown said...

திரு அர்ஜுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் , அவர் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

பாவா ஷரீப் said...

வாழ்த்துக்கள் திரு அர்ஜுனன்
thank u 4 sharing vincent sir

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

sakthi said...

வாழ்த்துக்கள் திரு .அர்ஜுனன் அவர்களே உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் .இந்த பதிவு மூலம் அறிமுகம் கொடுத்த வின்சென்ட் ஐயாவிற்கும் மிக்க நன்றிகள்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Vetirmagal said...

எத்தனை மகத்தான சேவை. மனம் நிறைகிறது!

அவருக்கு பாராட்டுகள்.

அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

திரு வின்சென்ட் அவர்கட்கு, வாழ்க வளமுடன்(மரங்களுடன்), நீவிர் வலைப்பூவில் போட்டுள்ள இந்த செய்தி எனது மனதினை கொள்ளை கொண்டது, 90 நாட்களில் வளரும் என்று கூறியுள்ளீர், என்ன வகை மரம் இது என்று கூற முடியுமா?

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

கீழ்கண்ட மரங்களை போத்து முறையில் வளர்க்கலாம்.

1.ஆலமரம்.
2.அரச மரம்
3.புங்க மரம்
4.பூவரசு
5.வேப்பமரம்
6.வாதநாராயண்
7.கிளிரிசீடியா
8.அத்தி
9.குல்மோஹர்(தவிர்ப்பது நல்லது)

pkg said...

வாழ்த்துக்கள் திரு அர்ஜுன்அவர்களே்தங்களின் மகத்தான சேவைக்கும் அவரை அறிமுகம் செய்த
திரு வின்சென்ட் அவர்களுக்கும் எனது வணக்கங்கள்

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.