நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் “மைக்ரோ பயோலஜி” துறை மருத்துவ தாவரங்கள் பற்றிய கண்காட்சியையும் கருத்தரங்கையும் சிறப்பாக சென்ற 7-3-2013 அன்று நடத்தினார்கள்.
முனைவர். லட்சுமணபெருமாள்சாமி அவர்கள் தலைமையுரையிலும், கல்லூரி முதல்வரும் மருத்துவ
தாவரங்களின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்தனர். அரியவகை மருத்துவ
தாவரங்கள் பார்வைக்கும், புகைபடங்களாகவும் விளக்கங்களுடன் அதிக அளவில் இருந்தது
கண்காட்சியின் முக்கிய சிறப்பு அம்சம்.
திரு.மதுராமகிருஷ்ணன் அவர்கள் இயற்கை விவசாயம் பற்றியும், அடியேன் மருத்தவ
தாவரங்கள் பற்றியும், திரு. ஆன்டோ அவர்கள் “முள்ளுசீதா” பற்றியும் விளக்கம் தந்தோம். கண்காட்சியை நன்கு கண்டுகளித்த மாணவமணிகளும் அமைதி காத்து கடைசிவரை
கருத்தரங்கில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
.
இன்றைய காலகட்டதில் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய எளிய மருத்துவத்தை எடுத்து
செல்வதற்கு இதுபோன்ற கண்காட்சியும் கருத்தரங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிலும்
நடைபெறுமானால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை நாம் காணலாம்.
கல்விப் பணிகளுக்கிடையே சிறப்பானதொரு நிகழ்வை நடத்திய பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துகள்.
Photographs Source : Viscom Dept,NASC
Photographs Source : Viscom Dept,NASC
4 comments:
படங்கள் அருமை... பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய மருத்துவ செடிகளின் முக்கியத்துவத்தை பரப்பும் தங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குறியது. நுண்ணியிரியல் துறை மணவர்கள் மிகவும் எளிதாக மருத்துவ செடிகளின் நோய் கிருமி எதிர்ப்பு குணங்களை பற்றி ஆராய்ச்சி செய்யலாம்.
நீங்கள் சொல்வது மிக்க சரி. ஆனால் இங்குள்ள சூழல்நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நிலைமை மாறும் என எண்ணுகிறேன்.
Post a Comment