Monday, March 18, 2013

தானியக் கீரை – எதிர்கால சத்துணவுப் பயிர்






தாவரவியல் பெயர்  :   Amaranthus hypochondriacus Linn
"ஸ்வர்ணா" என்ற இரகம்
தானியக் கீரையானது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையை  சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படுத்தலாம். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவிற்கு கீரை மகசூலும், 1-2;. டன்/ஹெக்டர் அளவிற்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைதொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை புனித தானியம் எனவும், இந்தியாவில் இப்பயிரானது ராம்தானா அல்லது கடவுளின் தானியம் என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது.விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டதட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. இரண்டு அடி முதல் எட்டு அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிக குறுகிய வளர்ச்சி பருவம் (80நாட்கள்) கொண்டது.
விதைகள்
தட்ப வெப்பநிலை
16°c - 35°c
மழையளவு
200 மி.மீ - 3,000 மி.மீ (ஆண்டு மழையளவு)
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
நிலம்தயார் செய்தல்
3 உழவு போதுமானது.

பயன்கள் :
ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கீரீம் தயாரிப்பிலும் இதர பேக்கிரி பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
வடஇந்தியாவில் இத்தானிய கீரையிலிருந்து செய்யப்பட்ட "லட்டு" மிகப் பிரபலம்.
63% கார்போஹைட்ரேட் மற்றும் 12.6 -17.6% புரத சத்தும் நிறைந்த தானியக் கீரை மற்ற எல்லா வகை தானியங்களையும் விட சிறந்தது.

நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளிலிருந்து தனிச் சிறப்புடன் விளங்குகிறது.

குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்து மிக்க கீரை / தானியமாகவும் இருப்பது, சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளாலாம்.

மேலும் விபரங்கள் பெற :
முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்  - 641 301
தொலைபேசி : 04254-22010 Extn 202 (or) 222398
அலைபேசி  : 94433 77970
Photographs & Text Source: Dr.K.Kumaran, Forest College, Mtp
 

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்கள் இந்த பகிர்வின் மூலம் தான் தெரியும்... நன்றி ஐயா...

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் பகுதியில் இதனை வளர்க்கிறார்களா? தெரிவியுங்கள்.

வேளாண்அரங்கம் said...

அருமை. நன்றி அய்யா. படங்களும் வெகு சிறப்பு

Kousalya Raj said...

Sir..

கேள்விபடாத ஒரு பயிர்...ஆனால் இதன் பயன்கள் பற்றி படிக்கும் போது என் ஆச்சர்யம் இன்னும் அதிகரிக்கிறது..நம் பகுதியில் இதனை பயிரிட முயற்சிகள் செய்யலாம் அதே சமயம் மார்கெடிங்க் பற்றியும் ஏற்பாடுகள் செய்து கொள்ளவேண்டும்...அரசும் வேளாண்மை துறையும் விவசாயிகளிடம் கொண்டு செல்ல வேண்டும், இதனை பயிரிட ஊக்குவிக்க வேண்டும்.

தானியத்தை பற்றிய தகவலை அக்கறையுடன் ஆர்வமாக பகிர்ந்தமைக்கு என் நன்றிகள் + வாழ்த்துக்கள்.

பசுமைவிடியல் முகநூல் பக்கத்தில் இதனை பகிருகிறேன்.

sakthi said...

மிக்க பயனுள்ள பதிவு நன்றி சார் !

S.Gnanasekar said...

தானியக் கீரை இப்படி ஒது தானியம் இருப்பதை தங்களின் பகிர்வின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அய்யா.

பூ விழி said...

இது பயிரிடபடுகிறதா இங்கு மார்கெட்டில் கிடைகிறதா புதிதாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி

வின்சென்ட். said...

M/s வேளாண்அரங்கம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. படங்களின் உரிமையாளர் முனைவர்.K.குமரன்

திருமதி.கௌசல்யா
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. மழை குறைவாய் பெய்யும் காலங்களில் இதனைப் பயிர் செய்யலாம்.
"பசுமைவிடியல் முகநூல் பக்கத்தில் இதனை பகிருகிறேன்"

உங்கள் பகிர்வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

வின்சென்ட். said...

திரு.சக்தி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

திரு ஞானசேகர்
திரு.மலர் பாலன்
உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.நாம் கவனிக்க வேண்டிய ஒரு பயிர். ஆனைகட்டி, ஊட்டிப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

kuppusamy said...

அருமை. இந்த வகைக் கீரை ஒட்டஞ்சத்திரம் பகுதியில் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் கணக்கில் போட்டு பூக்கள் விடும் முன்பு அறுவடை செய்து சுத்தம் செய்து கட்டுகளாகக் கட்டி கேரளாவுக்கு அனுப்புகிறார்கள் நல்ல விலை. குறுகிய காலமே. வரகம்பாடியில் இதன் விதையை வருத்து பொறியாகச் செய்து வெல்லப்காகில் உருண்டை பிடித்து பொறியுருண்டையாக உட்கொள்கிறார்கள். நல்ல சுவை.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.

சதுக்க பூதம் said...

quinoa என்ற கீரையை ஒத்த தென்னமேரிக்க பயிர் அமெரிக்காவில் பிரபலமாக விற்பனையாகிறது .அதுவும் அமெரிக்க பழங்குடியினரின் கண்டுபிடிப்பு என்கிறார்கள்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது முற்றிலும் சரிதான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் quinoa வேறு தானியக் கீரை வேறு போல் தோன்றுகிறது.