புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும்
இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர
தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை
கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம்
மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது.
இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும்
முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த
பயிற்சியின் போது கலைஞர்களுக்கு “கூலி இழப்பு” தொகையாக
மாதம் ரூ2000/= அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான
அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும்
பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.
தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528
இப்பதிவை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்.
பிறர்க்கு இச்செய்தியை தெரிவியுங்கள் / பகிர்ந்து
கொள்ளுங்கள். குறிப்பாக சுயுதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
No comments:
Post a Comment