Friday, July 8, 2011

எரிசக்தி மரவளர்ப்புத் திட்டம்


மின்சாரம் இன்றைய வாழ்வு முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதனை சுற்றுசுழலை பாதிக்காத வகையில் உற்பத்தி செய்வதுதான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும். அந்த வகையில் காற்றாலை, சூரியஒளி, கடல் அலை போன்றவை பிரபலம். தற்சமயம் தாவரக் கழிவுகளை எரிசக்தியாக பயன்படுத்தி மின்உற்பத்தி செய்து நமது மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் முன் வந்துள்ளனர். தூய்மையான சக்தி என்பதால் இதனை நாம் ஊக்குவிக்க வேண்டும். இதனை உற்பத்தி செய்ய மரதுண்டுகள் மற்றும் விவசாய கழிவுகள் வேண்டும். 07- 07- 2011 அன்று வனகல்லூரி மேட்டுப்பாளயம் வளாகத்தில் இதுதொடர்பான ஓப்பந்தம் ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் வனக்கல்லூரிக்குமிடையே  இடையே நடைபெற்றது. இதன்படி எரிசக்தி திறன் நிறைந்த மர வகைகளை தேர்வு செய்து தரிசு நிலங்களில் வளர்க்க தேவையான நாற்றுக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை  வனக்கல்லூரி விவசாய்களுக்கு தரும்.  விளைந்ததை எரிசக்தி நிறுவனம் வாங்கிக் கொள்ளும். வங்கிக்கடன் வசதியும் இருக்கும் என தெரிவித்தனர். எனவே இது நான்குமுனை கூட்டு முயற்சி. தமிழகத்தில் இதுபோன்று 14 மின்உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன என்பது உபரித் தகவல்.

தூய்மையான சக்தி, தரிசு நிலமேம்பாடு, மரங்களின் பரப்பு அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை, வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகரித்து வரும் மின்தேவைக்கும், மின்பற்றாக்குறைக்கும் தீர்வு என பல நன்மைகள் இருப்பதால் விவசாய அன்பர்கள் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படுத்தலாம்.

மேலும் விபரங்கள் அறிய :
வன கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளையம். 641 301
தொலைபேசி எண்: 04254-222010.
=============================================
ஆரோ மீரா எனர்ஜி பிரைவேட் லிமிடெட்
ஆரோமீரா ஹவுஸ்
ப.எண் 11, புதிய எண்29 ஷஃபி முகமது சாலை,
ஆயிரம் விளக்கு
சென்னை-600 006.
தொலைபேசி எண் :044- 28209800

No comments: