|
அன்புடன் காலை வெய்யிலை அனுபவிக்கும் குடும்பம். |
|
உணவு கிடைத்தவுடன் உறவை தவிர்கக திரும்பிக்கொள்கிறது. |
|
உறவை நோக்கி உஷ்ணப் பார்வை. |
சென்ற ஏப்ரல் மாதம் உதகை செல்லவேண்டி வந்தது. வழியில் சற்று ஓய்வு எடுத்து திரும்ப
செல்லாமென்று முடிவு செய்தோம். காலை வேளை 3
குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தன.
காரில் வந்த அந்த உபகாரி ஒரு தட்டில் கொஞ்சம் உணவை சற்று தள்ளி வைத்து விட்டு சென்றுவிட்டார். அடுத்த
சில நிமிடங்கள் என்னை கவனம் கொள்ள வைத்தது. குரங்குகளின் குணம் மாறியது. வேகமாக
பாய்ந்து அதனை கைபற்றிய ஒன்று மற்றவைகளை அண்டவிடாமல் முழுவதும் முடிந்தபின்தான்
சென்றது. குட்டியைக் கூட ஓரமாக வைத்து உணவை காலி செய்தது. மாலையில் திரும்பி
வரும்போது அதே இடத்தில் உணவிற்காக அவைகள் காத்திருந்தன.
|
குட்டியைக்கூட பின்தள்ளி உண்ணும் அவசரம் |
|
அடுத்த உணவை நோக்கிக் கண்கள் |
எண்ணையில் செய்த, சமைத்த உணவுகள் தருவதைத் தவிர்ப்போம். அப்படியே தருவதென்றால்
பழங்களைத் தருவோம். பழங்களையும் இரசாயன முறையில் பழுக்க வைக்கிறோம் என்பது வேறு
விஷயம். இப்படி உணவைத் தருவதால் அவைகள்
தங்கள் இயல்பான வாழ்கையிலிருந்து மாறி காடுகளுக்குள் செல்வதை தவிர்த்து அந்த
இடத்திலேயே இருக்கின்றன. மேலும் குழந்தைகள் ஏமாந்து இருக்கும் போது
அவர்களிடமிருந்து உணவுபண்டங்களை பிடுங்கி சென்று விடுகின்றன. இதனால் குழந்தைகள்
பயந்துவிடுகின்றனர். உணவினால் சுகவீனம் வரும்போது நாம் மருத்துவர்களிடம்
சென்றுவிடுகிறோம். அவைகள் எங்கு செல்லும்??? பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றில்
தரும்போது சுற்றுச்சுழலை மாசுபடுத்துடன் அதனையும் சேர்த்தே உண்ணும் அபாயம் உள்ளது.
வன உயிர்களுக்கு உபகாரம் செய்வதாக எண்ணி அவைகளுக்கு உபத்திரவம் தருகிறோம். இயற்கை
அவைகளை கவனித்துக் கொள்ளும் !!!!!
No comments:
Post a Comment