Saturday, March 26, 2011

மாடித்தோட்டத்தில் விளைந்தவை- புகைப்படம்



கொத்தமல்லி.

கீரை

அவரை

கீரைக்காக முருங்கை ஆரம்ப நிலையில்

வெங்காயம்

டேபிள் ரோஸ்

Tuesday, March 22, 2011

உலக நீர் நாள்


ஓவ்வொரு வருடமும் ஒரு குறிகோளுடன் கொண்டாடப்படும் உலக நீர் நாள் இந்த வருடம் நகரங்களுக்குக்காக தண்ணீர் என்ற குறிகோளுடன்  கொண்டாடப்படுகிறது.

குறைந்து வரும் மழை அளவு, பெருகி வரும் மக்கள் தொகை, உலகமயம், தாராளமயத்தில் கொள்ளைபோகும் விவசாய நிலங்கள் விவேகமில்லாத விஞ்ஞான வளர்ச்சி, பன்னாட்டு கம்பெனிகளின் பிடியில் பொருளாதாரம், சுற்றுசுழல், மற்றும் விவசாயம், போன்ற காரணங்களால் கிராமங்களிலிருந்து குடிபெயரும் மக்கள் அதிக வேலை வாய்ப்புகள் தரும் நகரங்களை நோக்கி வரும் அவலநிலை எல்லா வளர்ந்து வரும் நாடுகளிலும் ஏற்பட்டு வருகிறது.

இந்த இடமாற்றம் நகரங்களின் சுற்றுச்சுழலையும், தண்ணீர் தட்டுபாட்டையும்  பெருமளவு ஏற்படுத்துகிறது. அதற்கான தீர்வுகள் நம் கையில்தான் உள்ளது. மழையை தருவிக்க பெருமளவில் மரங்களை நடுதல், மழை நீர் சேமிப்பு, சேமித்த நீரை குறைவாக உபயோகித்தல், மறுஉபயோகம், மறுசுழற்சி ( 3R  Reduce, Reuse, and Recycle) என்ற கொள்கையை கடைபிடித்து உபயோகித்தால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கமுடியும். தொழிற்சாலை கழிவுகள் பெருமளவு நீராதாரங்களில் விடப்படுகிறது. வேலைவாய்ப்பை பாதிக்காதபடி இதற்கு முடிவு காணவேண்டும் இல்லையேல் அடுத்த வரும் பத்தாண்டுகள் ????? ஆண்டுகளாக இருக்கும்.

Monday, March 21, 2011

உலக வனநாள்


ஜப்பான் அணுமின் நிலையித்தில் வெடிப்பு.
மனிதர்களின் மிகப்பெரிய நண்பன் காடு.
காடுகளின் மிகப்பெரிய எதிரி மனிதன்
உலகத்தையே காக்கப் போராடும் பொதுநலவாதி மரம்....!
தன் இனத்தையே அழிக்கப் போராடும் சுயநலவாதி மனிதன்...!
 
காடு திருத்தி நாடாக்கினான்
விலங்குகள் அழிந்தன
மனிதன் விலங்கானான்.
நண்பர் திரு.ஈரோடு கதிர் அவர்களின் முகநூலில் (Face book) படித்தது
 
இந்த ஆண்டு வனநாளில் கிழக்குக் கடற்கரை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒரிசா, மற்றும் மேற்குவங்க அரசுகளும் மக்களும் தெளிவான அதே சமயம் நீண்டகால பாதுகாப்பு அரணைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிழக்குக் கடற்கரை பகுதி அதிக அளவு இயற்கை பேரிடர்களைச் சந்திப்பதும், தமிழகத்தின் கடலருகே இரண்டு அணுமின் நிலையங்கள் இருப்பதும் இதற்குக் காரணம். சென்ற வாரம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்துடன் கூடிய சுனாமி என்னும் ஆழிப்பேரலை அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சுழலை புரட்டிப் போட்டுள்ளது. நீண்டகால இடைவெளிகளில் வந்த இந்த இயற்கைப் பேரிடர்கள் இப்பொழுது அடிக்கடி நிகழ்கிறது. 2004 ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை லட்சங்களில் மக்களை அள்ளிச் சென்றது. ஜப்பானில் ஏற்பட்டது ஆயிரங்களில் என்றாலும் அணுமின் நிலையம் பழுதானதில் ஏற்பட்டுள்ள கதிரியக்கம் மக்களின் வாழ்வாதாரத்தையும் மனநிலையையும் பெருமளவு பாதித்துள்ளது. இயற்கையை வெல்லமுடியாதுதான் இருப்பினும் அது தந்த அருட்கொடை இந்த அலையாத்திக் காடுகள். 2004 ஆழிப்பேரலையில் இந்த காடுகளால் தப்பிய கிராமங்கள் உண்டு. எனவே நாம் இயற்கை பேரிடர்களை குறைக்க அலையாத்திக் காடுகளை அதிக அளவு வளர்ப்போம்.

மனிதனால் உண்டாக்கபட்ட இடர் அணுசக்தி. நாட்டிற்கு நாடு மிரட்டவும், சுரண்டவும் இந்த அணுசக்தி பயன்படுகிறது. நல்ல வழியில் அதனை பயன்படுத்தலாம் என்றாலும்  இதுபோன்ற சமயங்களில் அவற்றின் நம்பகத்தன்மை எப்பொழுதும் கேள்விக் குறிதான். எனவே மாற்று எரிசக்தியில் கவனம் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சூரிய சக்தி, காற்றாலை முக்கியமாக மரத்துண்டுகள் மூலம் மின்சார உற்பத்தி ஒரு நிலையான தீர்வை தரக்கூடும்.

கீழ்கண்ட தொடர்புகள் மேலும் பயனளிக்கும்


Sunday, March 20, 2011

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.



சிட்டுக் குருவியிடம் (சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?..) சேதியை சொன்ன சினிமா உலகம், பின்பு அவைகள் முத்தமிட்டு (சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...) மகிழ்ந்ததை கண்டது.  தங்களின் கட்டுபாடில்லா (சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு... ) உலகத்தை சொன்ன சினிமா உலகம் பின்பு அமைதியாகிவிட்டது. காரணம் இன்று அவைகள் நம் பகுதிகளிலிருந்து மறைய ஆரம்பித்ததின் விளைவு என்று எண்ணுகிறேன். வீட்டின் அமைதியான பகுதியிலோ அல்லது மொட்டை மாடியிலோ இந்த வேனிற் காலத்தில் அவைகளுக்கு மண்பாத்திரத்தில் நீரும் சிறுதானியங்களும் வையுங்கள். திரும்ப கவிஞர்கள் சிட்டுக் குருவிகள் பற்றி எழுதக்கூடும்.

இதுபற்றிய எனது பழைய பதிவைக் காண: 
உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010.
 
படம் உதவி : தமிழ்நாடன்

Monday, March 14, 2011

மசாலாப் பொடிகள் தயாரிப்பு - ஒருநாள் பயிற்சி


மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண அக்மாரக் கிரேடிங் கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

Friday, March 11, 2011

இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம்



மேலேயுள்ள படம் இந்த வருட " உலக நீர் நாள் " சின்னம். நகரங்களுக்கு தண்ணீர் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. படத்திற்கான   HTML Code கீழே உள்ளது . பதிவர்கள் இச்சின்னத்தை தங்களின் வலைப்பூக்களில் இட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை பிரபலபடுத்த அன்பாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s1600/wwd11+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhP2n-Y8MjiLCmSf7g08GscA-HjuWVbKLPtar5dhz55LMzDSsPWP7nXnE_T1tqLQaLg7r7JFC-w9Je2CHloeRrDgW83qk8TMyGTRANjHXbAhBtvAuNNBWM0Rc6lnHT5mfKnbuuxYE_UMlE/s320/wwd11+copy.jpg" width="200" /></a></div>

Monday, March 7, 2011

மரங்களை நேசித்த மாமனிதர் மதிப்பிற்குரிய “அய்யாசாமி” அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்.


எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்த பூமியை பசுமைபடுத்தி நாம் வளமாக வாழவேண்டுமென்று   தன் வாழ்நாளில் 3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்கம் ஏழூர் அய்யாசாமி”  அய்யா  அவர்கள் இன்று ( 07-03-2011 ) காலை இயற்கை எய்தினார்.  அவர் மறைந்தாலும் அவர் நட்டுச் சென்ற மரங்கள் ஆயிரமாண்டுகள் அவர் கதை பேசும். ஆழ்ந்த அஞ்சலிகளை உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 

மேலும் படிக்க திரு. கதிர் அவர்களின் 

Saturday, March 5, 2011

வீடுகளில் போன்சாய் வளர்ப்பு - - ஒருநாள் பயிற்சி.


இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால்  சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

போன்சாய்  புகைப்படங்களைக் காண கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
போன்சாய் மரங்களின் புகைப்படங்கள்