சிட்டுக் குருவியிடம் (சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா?..) சேதியை சொன்ன சினிமா உலகம், பின்பு அவைகள் முத்தமிட்டு (சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...) மகிழ்ந்ததை கண்டது. தங்களின் கட்டுபாடில்லா (சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு... ) உலகத்தை சொன்ன சினிமா உலகம் பின்பு அமைதியாகிவிட்டது. காரணம் இன்று அவைகள் நம் பகுதிகளிலிருந்து மறைய ஆரம்பித்ததின் விளைவு என்று எண்ணுகிறேன். வீட்டின் அமைதியான பகுதியிலோ அல்லது மொட்டை மாடியிலோ இந்த வேனிற் காலத்தில் அவைகளுக்கு மண்பாத்திரத்தில் நீரும் சிறுதானியங்களும் வையுங்கள். திரும்ப கவிஞர்கள் சிட்டுக் குருவிகள் பற்றி எழுதக்கூடும்.
இதுபற்றிய எனது பழைய பதிவைக் காண:
உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010.
இதுபற்றிய எனது பழைய பதிவைக் காண:
உலக சிட்டுக் குருவிகள் தினம் 2010.
படம் உதவி : தமிழ்நாடன்
9 comments:
காலை சிட்டுக்குருவிகளின் கீச்சென்ற ஒலியில் துயில் எழும் சந்தோசத்தை இழந்து உள்ளோம்...
நல்ல பதிவு ...
நினைவூட்டலுக்கு நன்றி
நல்ல சிந்தனை..
திரு."குறட்டை"புலி
திருமதி.தமிழ்மலர்
முனைவர்.இரா.குணசீலன்
உங்கள் அனைவரின் வருகைக்கும் மிக்க நன்றி.
நகரங்களில் முற்றிலும் கண்ணுக்குப் புலப்படாமலே போய்விட்ட இந்த சிட்டுக்குருவிகளை, கிராமப்புறங்களிலாவது பாதுகாக்க வேண்டும். நல்ல பகிர்வு நண்பரே! (உங்கள் இடுகை என்று சோடை போயிருக்கிறது?). மிக்க நன்றி!
திரு.சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கு மிக்க ந்ன்றி.நீங்கள் கூறுவது போல் கிராமங்களிலாவது காப்பாற்றப்பட வேண்டும்.
சின்ன வயதில் சிட்டுக்குருவிகளுக்காக இரண்டு தூண்களுக்கு நடுவில் பலகை அமைந்து அதிலே அவை குடியிருக்கக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். இப்போது காணவே கிடைப்பதில்லைதான்:(!
தங்கை தன் வீட்டு மொட்டை மாடி தோட்டத்தில் நீங்கள் சொல்வது போல் செய்து வருகிறாள். அது கட்டிய அழகான கூட்டினை பதிந்துள்ளேன் இங்கு:http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721/in/set-72157623916639732/
”மண்பாத்திரத்தில் நீரும் சிறுதானியங்களும் வையுங்கள்.” நல்ல செய்தி.
திருமதி.ராமலக்ஷ்மி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. புகைப்படம் சிறப்பாக உள்ளது.இயற்கையை பேணுவது இன்பம்தான்.
திருமதி.மாதேவி
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கோடைகாலத்தில் பறவைகள் பொதுவாக நீருக்கும் நிழலுக்கும் அலைந்து திரியும். நம்மால் முடியக்கூடியது நீரும், சிறுதானியமுமே.
Post a Comment