Monday, March 7, 2011

மரங்களை நேசித்த மாமனிதர் மதிப்பிற்குரிய “அய்யாசாமி” அய்யா அவர்கள் இயற்கை எய்தினார்.


எந்தவித எதிர்பார்ப்புமின்றி இந்த பூமியை பசுமைபடுத்தி நாம் வளமாக வாழவேண்டுமென்று   தன் வாழ்நாளில் 3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்கம் ஏழூர் அய்யாசாமி”  அய்யா  அவர்கள் இன்று ( 07-03-2011 ) காலை இயற்கை எய்தினார்.  அவர் மறைந்தாலும் அவர் நட்டுச் சென்ற மரங்கள் ஆயிரமாண்டுகள் அவர் கதை பேசும். ஆழ்ந்த அஞ்சலிகளை உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 

மேலும் படிக்க திரு. கதிர் அவர்களின் 

4 comments:

settaikkaran said...

ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே! :-(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அஞ்சலிகள்.

அவருடைய மரங்கள் மூலம் அவர் அழியாவரமாக நம்முடன் இருக்கிறார்.

ராமலக்ஷ்மி said...

ஆம், நட்டு வைத்த மரங்களின் மூலம் எத்தனை தலைமுறைகளுக்கு நன்மை செய்துள்ளார்!

அவருக்கு நம் வணக்கங்களும் அஞ்சலிகளும்.

http://machamuni.blogspot.com/ said...

இவர் போன்ற தன்னலமில்லாத் தெய்வங்கள் மனித வடிவில் வாழ்ந்து மற்றவர்களுக்காக வாழ்ந்து,தன்னுயிர் போல் மன்னுயிர் காத்து இயற்கையோடு கலந்துவிட்டவர்கள்.இவர்களுக்காக ஒரு நிமிடம் நம் மௌன அஞ்சலியையும்,இரு துளி கண்ணீரையும் காணிக்கை ஆக்காவிட்டால் நாம் மனிதனாகப் பிறந்ததில் அர்த்தம் இல்லை.
கருத்துரை எழுத இடம் அளித்தற்கு மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்