Thursday, November 25, 2010

நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சில தாவரங்கள் காரணங்களுக்காகவும், சில தாவரங்கள் இறக்குமதி மூலமும் நம் நாட்டில் பரவி இன்று அழிக்கமுடியாத அளவில் நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு ஒவ்வாமையையும், நோய்களையும் உண்டாக்கி மனிதர்களையும், மிருகங்களையும், தாவரங்களையும் கூட பாதிக்கிறது. நாமும் பார்த்து பழகிவிட்டதால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நூற்றுக்கு மேல் இத்தாவரங்கள் இருந்தாலும் 5 முக்கிய தாவரங்கள் மிக பெரிய அளவில் நாடு முழுவதும் பரவி வரப் போகின்ற தலைமுறையின் வாழ்வாதாரங்களையும், இயற்கைச் சுழலையும் வெகுவாக பாதிக்கப் போகின்றது.
சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்.

ஆகாயத் தாமரை.

பார்த்தீனியம்.

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட்.

உண்ணிச் செடி.

பெருகிவரும் ஜனத் தொகை, சுருங்கி வரும் விளைநிலம், பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்கள், கேள்வி குறியாகும் பருவமழை, புவிவெப்பம், சுற்றுச்சுழலைப் பாதிக்கும் நுகர்வுக் கலாச்சாரம் என காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த தாவரங்கள் பல லட்சம் ஏக்கர் நிலங்ககளிலும், நீர்நிலைகளிலும் பரவி நமது விவசாயத்தையும், கால்நடைகளையும் கேள்விக்குறியாக்கி வருவது உண்மை. மரபணுமாற்றம் செய்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என்று கூறலாம் ஆனால் அவை வளர்வதிற்கும் நிலமும், நீரும் தேவைதானே. இத்தாவரங்கள் போர்க்கால அடிப்படையில் அதிக கவனம் செலுத்தி கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் இல்லையேல் இவற்றால் ஏற்படும் விளைச்சல் குறைதல், மேய்ச்சல்நிலம் குறைதல், காடுகளுக்கு பாதிப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை மீட்க செய்யும் தொகை, என கணக்கிட்டால் அவை பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். இத்தருணத்தில் தேவை இவைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை. குழந்தைகளுடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதியுங்கள். அழிப்பதில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் திரு.கேவின் கார்டரைப்போல் இருக்கப் போகிறோமா?? முடிவு உங்கள் கையில்.

பார்க்க எனது பழைய பதிவு. பரிசும், பாடமும்

ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

* ஆங்கிலப் பெயர்கள். தமிழில் இருந்தால்  தெரிவியுங்கள்.
Source : Dr K. Venkataraman’s Article in “ Forntline” Volume 26 - Issue 13 :: Jun. 20-Jul. 03, 2009

12 comments:

Sundararajan P said...

சமூக கண்ணோட்டத்துடன்கூடிய நல்ல பதிவு வின்சென்ட் சார்.

வின்சென்ட். said...

திரு.சுந்தரராஜன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.அந்நிய தாவரக் களைகள் பற்றிய கட்டுரைகளை "பூவுலகு"இதழ்களில் எதிர்பார்கிறேன் .

Anonymous said...

Hi Vincent Sir,

All ur posts are very useful and its very new information to know.
Because I have seen all these plants in every area of my village.
Till now, i thought these palnts are helping to get a rainfall.
After reading this article only,I came to know about the real face of these plants.

Thank you very much sir...
A real salute for ur contribution..
Keep doing. All the best.

Sakthi,Erode

வின்சென்ட். said...

திரு.சக்தி

உங்கள் வருகைக்கு நன்றி கருத்துகளுக்கும் நன்றி. இது போன்று இன்னும் நூற்றுகணக்கான செடிகள் உண்டு.இவற்றை ஓழித்தாலே 10 - 20 சதவீத விவசாய பிரச்சனைகள் குறையும். யார் இதற்கு முடிவு கட்டுவது ???

sakthi said...

ஆகாயத்தாமரையால் நிறைந்திருக்கும் குளத்தை பார்த்தால் மனதிற்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.. நல்ல பதிவு

வின்சென்ட். said...

திரு.சக்தி

உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் இது அகற்றப்படவில்லை என்றால் நமது குழந்தைகளின் குழந்தைகள் நீருக்காக அவதிப்பட போகிறார்கள்

Anonymous said...

I recognized the water hyacinth. This was seen as a problem even 35 years ago. After reading your post
I looked for some information in the wikipedia. Looks like they have taken care of this problem in N America.
Awareness is key. Hopefully academics will come up with
management plans for issues like this.
Good post!

வின்சென்ட். said...

Dear Sir

Thank you very much for your comments. Here in India also they removed this weed biologically . Kindly go through the link http://www.nrcws.org/Story6.pdf
But it should implemented very quickly .Time is running out. As you said rightly “Awareness is key”. Let us hope for the best.

Anonymous said...

Thank you for the link. I went through it. When I was young I only heard about the problem. Its heartening to note that
that someone has actually done something about it.
How can people help with this issue in our State. I see many civic minded blogggers here interested in helping others.
Good luck with your efforts. Thanks again for
spreading awareness!

வின்சென்ட். said...

Dear Sir

Once again thanks for your quick comments after visitng the link. The media people got their own sensational news and soaps to run their show. Nature got the power to rectify it, only thing it will take it's own Time thats all.

சதுக்க பூதம் said...

தற்போது காலத்துக்கேற்ற அருமையான பதிவு. ஆகாய தாமரையை ஒழிப்பது மிகவும் கடினம். அதனால் இழப்புகள் மிக அதிகம். தற்போது அகில இந்திய வேளாண் அராய்ச்சி கழகம் சார்பில் ப்ரு புதிய அராய்ச்சி பிராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் படி இந்தியாவில் தற்போது பரவி உள்ள வெளி நாட்டு களை செடிகளையும் அவை எங்கு பரவலாக உள்ளது என்றும் கணக்கிடுகிறார்கள். அதை எந்த அளவு ஒழுங்காக செய்வார்கள் என்று தெரியவில்லை. கற்பூரவல்லி செடியில் உள்ள ஒரு வேதி பொருளுக்கு ஆகாய தாமரையை அழிக்கும் சக்தி இருப்பதை நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் கண்டறிந்தார். ஆனால் அது விரைவில் ஆவியாக கூடிய தன்மை இருந்ததால் அதனால் செடியின் மீது நிலைத்து நின்று களையை கட்டு படுத்த முடியவில்லை.

வின்சென்ட். said...

திரு.சதுக்க பூதம்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் தெரிவித்துள்ள செய்திகள் மகிழ்ச்சி தரக் கூடியதும் பயனுள்ளதும் ஆகும். ஆனால் இவைகள் போர்கால அடிப்படையில் அகற்றப்பட வேண்டும். தேவை பொதுமக்களிடம் இவைகள் பற்றிய விழிப்புணர்வும், உத்வேகமும்.