உலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506
8 comments:
ஈரோட்டில் இந்த பயிற்சிகள் எங்கு தரப்படுகிறது என்று தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்..
திருமதி.கண்ணகி
உங்கள் வருகைக்கு நன்றி. ஈரோட்டில் இந்த பயிற்சிகள் நடக்கும் போது தெரிவிக்கிறேன். அதுவரை அனுபவ பயிற்சியை ஆரம்பியுங்கள்.
வணக்கம் திரு வின்சென்ட்...இன்று தான் சுற்றுச்சூழலை பாதிக்கும் அயல் நாட்டுத் தாவரங்கள் என்ற பதிவைப்படித்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. லாண்டானா செடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அழகான பூக்கள்,அதிகமான கவனம் தேவையில்லை..அதனால ஆரஞ்சு, பிங்க்,வெள்ளை,வயலட் னு நிறைய கலர் தேடித்தேடி வாங்கினேன் சார்..தொட்டியில தான் வச்சிருக்கேன்..ஏகப்பட்ட பட்டாம்பூச்சி வருது இந்த பூக்களுக்கு.இப்ப என்ன பண்ணலாம்?
மாடியில் முருங்கை வளர்ப்பு நல்ல ஐடியா..எங்க வீட்டு முருங்கை மரத்துல ரொம்ப பூச்சி வருதுன்னு சுத்தமா வெட்டிட்டேன்..கீரைய தான் மிஸ் பண்றோம்..இப்ப தொட்டியில வளத்துடலாம்..நன்றி..
coimbatore இந்த பயிற்சிகள் எங்கு தரப்படுகிறது என்று தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்..
திருமதி.ஷஹி
உங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் அழகிற்காக வந்தது லாண்டானா செடி. அப்படியே விட்டு விடுங்கள். மற்ற இடங்களில் பரவி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் எடுத்த புகைப்படம் வீட்டருகில் புதர் போல் உள்ளது.
முருங்கையை கீரைக்காக வளர்த்தால் பூச்சிக் கட்டுப்பாடு எளிது.
திரு.குணா
கோவையில் விவசாய கல்லூரியில் தருவார்கள்.ஆனால் அது பட்டயப் படிப்பு. அதிக நாட்கள் படிக்க வேண்டும்.
அருமை . மிகவும் பயனுள்ள பயிற்சிதான் . பகிர்வுக்கு நன்றி
திரு. சங்கர்
உங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment