நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.
100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.
ஆரஞ்சை இருப்பதை விட
7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட
4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட
4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட
2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட
3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட
2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது
|
குச்சிகள், இலைமக்கு மற்றும் மண்புழு |
|
தண்ணீர் விட வேர் அருகில் குழாய் |
|
ஆறுமாத செடி |
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாக குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.
10 comments:
அருமையான பதிவு, நன்றி,
தங்கள் பதிவுகள் அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும்.எனக்கு கொசு ஒழிப்பு பற்றிய விவரம் அளித்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன். my mail id : adhiselvam@in.com
//செடி முருங்கை//
வென்சென்ட்,
செடி முருங்கை கீரைக்கானது மட்டுமா அல்லது பொதுவான முருங்கை (மரம் முருங்கை) போல காயும் கொடுக்குமா?
பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்
ஆனால் மரவிதையை எப்படிப் பெறுலமென்று கூறுவீர்களா?
நட்புடன் மட்டுவில் ஞானக்குமாரன் (கனடா)
எங்களைப்போல குடியிருப்பில் இருப்பவர்கள்.. முருங்கைக்கீரைக்கு கீழ்வீட்டுக்காரர்கள் எவரையேனும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.. இது நல்ல யோசனை தான்.
வழமைபோல, பயனுள்ள தகவலுடன், பலனை எதிர்பாராமல் பொதுநல அக்கறையோடு எழுதப்பட்டுள்ள பொறுப்பான இடுகை! வலையுலகில் நீங்கள் ஒரு அத்திப்பூ!
திரு.ஆதி செல்வம்
உங்கள் வருகைக்கு நன்றி. தற்சமயம் வந்துள்ள “Vanish” கொசு ஒழிப்பிற்கு ஏற்றதாய் உள்ளது.
திரு. கல்வெட்டு
உங்கள் வருகைக்கு நன்றி. செடி முருங்கை முக்கியமாக காய்க்கானது. அதிக மகசூல் தரும். Pkm1 Pkm2 ஆகியவை பிரபலம். விவசாயிகள் பொதுவாக செடி முருங்கையைத்தான் தற்போது பயிர் செய்கின்றனர். நான் அதனை கீரைக்காக வளர்க்கிறேன். காற்றுக் காலம் இனி ஜூன் மாதம்தான் அதுவரை சற்று வளரவிட்டு காய் பறிக்கலாம் என்றிருக்கிறேன். பூக்கள் வந்து விட்டன.
திரு.ஞானக்குமாரன்
உங்கள் வருகைக்கு நன்றி. இங்குள்ள எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. கனடா பற்றி தெரியவில்லை. அங்கு வளர்வது சற்று கடினம் என்று நினைக்கிறேன் காரணம் இது வெப்பமண்டல தாவரம். பசுமைக் குடில் அமைப்பில் வளரலாம் சோதித்துப் பாருங்கள்.
திருமதி..முத்துலெட்சுமி
உங்கள் வருகைக்கு நன்றி. மாடிகுடியிருப்பில் இருப்பவர்களுக்கு இது உபயோகப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.
திரு. சேட்டைக்காரன்
உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. பல நல்ல விஷயங்களை எனக்குத் தந்த சமுதாயத்திற்கு நான் தரும் மிக மிக சிறிய பங்களிப்பு இந்த வலைப் பூ.
வழக்கம் போல , என்னை மிகவும் உக்குவிக்கும் பதிவு. உடனே ஏற்பாடுகள் செய்து, வளர்க்கத் தூண்டுகிறது! நன்றி.
உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால், உங்கள் பதிவிலிருந்து பகுதிகளை, ஆங்கிலத்தில் , என்னுடைய பதிவுகளில் பயன்படுத்தலாமா?
உங்கள் பதிவுகள் தமிழ் தெரியாத, என் தாவர ஆர்வமுள்ள தோழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
Pattu
Http://gardenerat60.wordpress.com
M/s.Pattu
உங்கள் வருகைக்கு நன்றி. தாராளமாக புகைபடத்தையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மக்கள் நம்புவார்கள். நல்ல விசயங்கள் மக்களை சென்றடைந்தால் சரி. PKM1 or PKM2 உபயோகியுங்கள்.
தகவலுக்கு நன்றி, மிகவும் பயனுள்ள கட்டுரை மாடியில் வசிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்,மேலும்
கொசு ஒழிப்புக்கு தங்கள் தகவலுக்கும் நன்றி.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment