Thursday, July 12, 2007

பரிசும், பாடமும்.

பரிசும், பாடமும்.



1994 ஆம் ஆண்டு திரு. கேவின் கார்டரால் ''சூடான்'' நாட்டு பஞ்சத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அவருக்கு புகழ்மிக்க '' புலியட்சர் '' பரிசை பெற்று தந்த உலகை உலுக்கிய புகைப்படம். ஐ.நா. சபையின் உணவு கூடத்தை நோக்கி செல்லும் குழந்தை , குழந்தையின் உயிர் பிரிவதற்காக காத்திருக்கும் கழுகு. சோகம் என்னவென்றால் 3 மாதங்கள் கழித்து மன உளச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். காரணம் அக்குழந்தையின் முடிவு பற்றி கேவின் கார்டருக்கும் தெரியவில்லை. இந்த புகைப்படத்தை எடுத்தவுடன் வந்த வேலை முடிந்ததென்று சென்றுவிட்டார்.

இப்புகைப்படத்தை வலைப்பதிவிலிடக் காரணம் நாமும் கேவின் கார்டரைப் போல் நமது வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் '' புவி வெப்பம்'' என்னும் கழுகிடமிருந்து இந்த புவிக் குழந்தையைக் காப்பாற்றுவோம். மரம்நடுவோம், மழைபெறுவோம் அதனால் வளம்பெறுவோம்.

இந்த புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் நான் மரங்களுக்கும், தற்போது மரங்களை வளர்க்க உதவும் நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன். நண்பர்களுக்கு, விவசாயத்தின் (உணவின்) ஆதாரம் மரங்கள் எனவே மரங்களை பாதுகாத்து பாராமரிப்பது நமது கடமை. வேலை, பொழுதுபோக்கு என்று மட்டுமேயிராமல் மகிழ்ச்சியுடன் மரங்களையும் நடுவோம்.

4 comments:

வெங்கட்ராமன் said...

என்னுடைய பதிவில் http://rajapattai.blogspot.com
புவி வெப்பமடைவது பற்றிய பதிவுகளுக்கு இனைப்பு கொடுத்துள்ளேன்.

நீங்கள் அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.

உங்கள் பதிவை படிக்கும் 100 பேர்களில் ஒருவர் மனம் மாறினாலும் உங்களுக்கு அது வெற்றியே. . . .

நானும் அதைப் பற்றி எழுத முயற்சித்தேன் எல்லோருக்கும் புரிகிற வழியில் எழுத முயன்று கொண்டு இருக்கிறேன்.

kuppusamy said...

நன்பரே. மரம் பற்றி இவ்வளவு அழகாக அறிவுருத்தி யுள்ளீர்கள். வளர்க மரங்கள்.
க.பொ.குப்புசாமி, கோவை-641037

kuppusamy said...
This comment has been removed by a blog administrator.
வின்சென்ட். said...

உண்மையில் படிக்கும் 100 பேர்களில் ஒருவர் மனம் மாறினாலும் நமக்கு அது வெற்றியே.விரைவில் விரிவாக எழுதுகிறேன். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.