Sunday, October 17, 2010

மாடியில் முள்ளங்கி வளர்ப்பு

அறுவடைக்குப் பின்.
முள்ளங்கி
தாவரவியல் பெயர்: Raphanus sativus

மிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.
அறுவடைக்குத் தயார்

இந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Anonymous said...

nice

வின்சென்ட். said...

திரு.ராம்ஜி
திரு. அனானி

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

தோட்டக்காரன் said...

உங்கள் வலைப் பதிவு தந்த தைரியத்தில் நானும் களமிறங்கியிருக்கிறேன். ஆனால் அரிச்சுவடி தெரியாமல் ஆர்வக் கோளாறில் அடிபட்டாவது கற்றுக் கொண்டாக வேண்டுமென்கிற தீவிரத்தில் இருக்கிறேன்.

உங்கள் பதிவில் இருந்து விவரமெடுத்து சேலத்தில் இருந்து மண்புழு உரப் பை ஒன்றையும் வாங்கி, நீங்கள் மாடியில் கீரை வளர்த்ததை ஈயடிச்சான் காப்பியாக நானும் செய்து இன்றைக்கு 14 நாட்கள் ஆகிறது. அதை வலையேற்ற ஒரு பதிவும் துவங்கி இருக்கிறேன். இந்த விஷயத்தில் உங்களை ஒரு குருவாகவே பார்க்கிறேன்.

எனக்கு நிறைய அடிப்படை சந்தேகங்கள் இருக்கிறது. தங்களுக்கு நேரமிருந்தால் அவற்றை கேட்டுத் தெளிய ஆர்வமாயிருக்கிறேன். முள்ளங்கி ஆர்வத்தை தூண்டுகிறது.

வின்சென்ட். said...

திரு. தோட்டக்காரன்
உங்கள் வருகைக்கும் முயற்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.நகர விவசாயம் காலத்தின் கட்டாயம் அதனை நீங்கள் ஆரம்பித்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் சந்தேகங்களுக்கு எனது அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
98940 66303

ஷஹி said...

மிகவும் உபயோகமான,இக்காலகட்டத்துக்கு அவசியமான, எனக்கு ரொம்பவும் விருப்பமான துறை...கூகுள் சர்ச்சில் பலவாறாகத் தேடியும் விபரமாக, தோட்டக்கலை பற்றி, அடிப்படையிலிருந்து சொல்லும் தளங்கள் வேறு ஒன்றும் இல்லை என்று தான் நினைக்கிறேன்.உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை,பாராட்டுக்கள்...மிக்க மகிழ்ச்சி..நானும் வீட்டில் தோட்டம் அமைச்சு, ஒரு பாரதியார் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி,(பத்து பதினைந்து தென்னை மரம்)...மா, பலான்னு வச்சேன் சார், நல்லா காய்கிது,ஆனா ஒண்ணு கூட எங்களுக்கு கெடக்கல!!! கொரங்கு சார்!!! பயங்கர தொல்ல, ...கொரங்கு படையே அலையிது எங்க ஊருல!!! இதுக்கு என்ன பண்ணலாம்? எங்க அப்பா சொல்ற மாதிரி அதுங்களுக்கு போன மிச்சம் தான் நமக்குனு சொல்லாம, ஒரு நல்ல வழி சொல்லுங்க...

ஷஹி said...

word verification வேண்டாமே!

வின்சென்ட். said...

திரு.ஷஹி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. தென்னை மரத்தில் 15 அடிஉயரத்தில் முள் வைத்து கட்டுவார்கள். மற்றவைகளை காப்பது சற்று கடினமே. உங்கள் தந்தை கருத்துப்படி
"அதுங்களுக்கு போன மிச்சம் தான் நமக்கு"

word verification எடுத்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.

Paleo God said...

அசத்தல் போட்டோ தலைவரே! :)

மற்றபடி தோட்டக்காரன் மற்றும் ஷஹி அவர்களின் கருத்தே என்னுடையதும் :)

அலைபேசி எண்ணிற்கு நன்றி நானும் தொடர்புகொள்கிறேன்.

ஒரு விண்ணப்பம் அடிப்படையிலிருந்து ஒரு சிறு வீட்டுத்தோட்டம் அமைக்க என்ன என்ன செய்யவேண்டும் காய்கறிகள்/கீரைகள் வளர்க்க ஒவ்வொரு செடிக்குண்டான ஆரம்பம் முதல் முடிவு வரையிலான என்ன என்ன செய்யவேண்டும் என்ற விஷயங்கள், களிமண், செம்மண், வகையாக இருந்தால் என்ன செடிகள் வைக்கலாம், மண்ணை வளப்படுத்தல் போன்ற பல அடிப்படை விஷயங்கள், வீட்டுத்தோட்டத்திற்கான இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு, உரம் மற்றும் சிறிய அளவிலான பசுமைக் குடில் அமைத்தல், போன்ற பல விஷயங்கள் நீங்கள் எழுதினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

குறிப்பாக சிறிய அளவிலான வீட்டுத்தோட்டம் மற்றும் மாடியில் தோட்டம் அமைக்க சரியான வழிகாட்டும் (அடிப்படை முதல்) விவரங்கள் இல்லை என்பதே என் எண்ணம். நீங்கள் எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

நன்றி. :)

ஷஹி said...

பாத்தீங்களா?நீங்களும் அப்புடியே சொல்லிட்டீங்க? அது சரி, அதென்ன இப்புடி "ஷஹி" ன்னு...feminine ஆ பேரு வச்சிருக்கேன், திரு ன்னு சொல்றீங்க எல்லாரும்? நான் திருமதி சார்,,anyhow பதில் அளித்ததுக்கு நன்றி..

வின்சென்ட். said...

திரு.ஷங்கர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் விருப்பம் போல் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடியில் தோட்டம் அமைக்க நான் பின்பற்றும் முறைகளை வரும் பதிவுகளில் பதிவேற்றுகிறேன்.

வின்சென்ட். said...

திருமதி.ஷஹி

மீண்டும் உங்கள் வருகைக்கும் நன்றி. பொதுவாக மிருகங்களின் வாழ்விடங்களில் நாம் ஆக்கிரமிப்பு செய்து அதன் உணவாதாரம், நீராதாரம் இவற்றை அழித்துவிட்டு அவைகள் நம் இடம் வந்து பசியாற்றும் போது நாம் வருத்தப்படுகிறோம். மனிதர்களை போல் அவை பல தலைமுறைகளுக்கு சேமிப்பதில்லை. அன்றைய பசிக்கு மாத்திரமே அவை உண்கின்றன.

உங்களை "திரு" என்றது எனது அறியாமை தவறுக்கு வருந்துகிறேன்.

பனித்துளி சங்கர் said...

அருமை நண்பரே . விவசாயத்தை மறந்து வரும் பலரின் மத்தியில் கணினியில் கூட எளிமையான முறையில் முல்லேங்கி வளர்ப்பது பற்றி பதிவிடும் விதம் வரவேற்கத் தகுந்தது . தொடரட்டும் தங்களின் மகத்தான சேவை . பகிர்வுக்கு நன்றி

வின்சென்ட். said...

திரு. சங்கர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. வரும் பதிவுகளில் வீட்டுத் தோட்டத் பற்றிய எனது அனுபவங்களை மற்றவர்களுக்கு உபயோகமாக இருந்தால் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.