Sunday, October 3, 2010

அக்ரி இன்டெக்ஸ் 2010

டால்பின் வடிவில் மலர் அலங்காரம்
இந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அரங்குகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதிக தகவல்களோடு இருந்தது. கருத்தரங்கம் நடைபெற்ற இடமும் அரங்குகளுக்கு மத்தியில் இருந்தது சிறப்பு. இந்திய வேளாண்மை வேலையாட்கள் சார்ந்து இல்லாமல் இயந்திரம் சார்ந்து மாறிக் கொண்டிருப்பதை தனியார் அரங்குகளில் காண முடிந்தது. இது நாட்டின் வளர்ந்து வரும் விவசாய வேலையாட்கள் பற்றாக் குறைக்கு தீர்வா ? அல்லது பிரதமர் கருத்துப் போல    நாம் வறுமையிலிருந்து தலைநிமிர்ந்து இருக்க ஓரே வழி அதிக ஆட்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதுதான் (The only way we can raise our heads above poverty is for more people to be taken out of Agriculture )  என்று எண்ணுமளவிற்கு இராட்சத வேளாண்மை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இயந்திரம்
இவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த இயந்திரங்கள் நாட்டில் நடக்கும் நிலபேரங்களைப் பார்க்கும் இது மிகப் பெரிய நிலபிரபுக்களுக்கும், கம்பெனி விவசாயத்திற்கும் வித்திடுகிறது அதே சமயம் குறைந்து வரும் மழையளவு சிறு, குறு விவசாயிகளை வரும் ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்ற உதவும் என்று தோன்றுகிறது. ஆனால் சில நல்ல விஷயங்களும் இருந்தன.
ஹைட்ரோபோனிக்ஸ் - காய்கறி வளர்ப்பு
எளிய நகர விவசாயத்திற்கு உதவும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயத்திற்கு அதன் மாதிரி அமைப்புக்களை வைத்திருந்தனர்.
ஹைட்ரோபோனிக்ஸ் - தீவன வளர்ப்பு

இதே முறையில் தீவன வளர்ப்பும் உண்டு என்று கூறி விரைவில் நம் நாட்டிலும் கிடைக்கும் என்றார்கள்.
சோலார் விளக்குப் பொறி
சோலார் விளக்கின் மூலம் பூச்சிகளுக்கு பொறி அமைப்பு நேர்த்தியாக இருந்துது. விலையும் சுற்று அதிகம் தான். இதனால் அவற்றை ‘திருட்டு’ காரணமாக நடைமுறையில் உபயோகபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. கொட்டில் வளர்ப்பு முறையில் ஆடு, பன்றி, கோழிவளர்ப்பிற்கு தேவையான தரைஅமைப்பு (Floor) நடைமுறையில் சிறப்பாக உபயோகப்படுத்த முடியும் என்று தோன்றியது.
உயரமான தரைஅமைப்பு (Floor)
எளிதாக கழிவுகள் கீழே விழவும் கழுவி விடுவதற்கு எளிமையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அமைப்பதும் பராமரிப்பதும் சுலபம்.இயற்கையிடு பொருட்கள் நிறைய இருந்தது. வண்ணமலர், காய்கனி அலங்காரங்கள் நேர்த்தியாக இருந்துது.
காய்கறியில் அலங்காரம்
பெருகி வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் மழையளவு, நகரத்தை நோக்கிச் செல்லும் கிராம மக்கள், சுருங்கி வரும் விளைநிலங்கள், மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக பலன் தரும் புதிய யுக்திகள், இயந்திரமயம் என இந்திய விவசாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

9 comments:

sakthi said...

நல்ல பயனுள்ள பகிர்வு

ஹுஸைனம்மா said...

//இவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை.//

ஏன் சிறு/குறு விவசாயிகள் இணைந்து - தம் நிலங்களை இணைத்து - விவசாயம் செய்யக்கூடாது? இது செலவை மிச்சப்படுத்தி, வருமானத்தை, விளைச்சலை அதிகப்படுத்துமே? இது குறித்து ஏன் விவசாய சங்கங்கள் சிந்திக்கக்கூடாது?

வின்சென்ட். said...

M/s Sakthi
உங்கள் வருகைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திருமதி.ஹுஸைனம்மா
உங்கள் வருகைக்கு நன்றி. ஒன்று அவைகளின் விலை மிக அதிகம் அந்த அளவிற்கு அதனை உபயோகப்படுத்தி லாபம் பார்ப்பது சற்று சிரமம். சிறு/குறு விவசாயிகள் இணைப்பு என்பது நம்நாட்டில் சிறிது கஷ்டம். காரணம் விவசாய முறை, கல்வி, ஜாதி, மதம், மொழி,அரசியல் கட்சி என பிரிப்பதற்கு நிறைய காரணங்கள் இருப்பது.

sasitharan said...

This is one of the better blog, keep the good work..

sasitharan said...

Great work.. keep it up.. your doing a great job

வின்சென்ட். said...

Mr.Sasitharan


Thank you very much for your visit and comments

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

உயரமான தரை அமைப்பு நல்ல யோசனை.

வண்ணமலர்,காய்கனி அலங்காரம் அருமை.

வின்சென்ட். said...

திருமதி.கோமதி அரசு

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.