|
கின்னஸ் சாதனை |
பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம்.
|
சிறந்த கை கழுவும் முறை |
இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று சுப்புராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Source : www.ikmahal.com/
6 comments:
Good information. Thanks.
திரு.இளங்கோ
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
Veru useful info! Thanks..i hope you update with few more!
Agriculture Job Descriptions
The Author of Job Descriptions
Thank you very much for your visit.
கை கழுவும் செயலை கவனமாக செய்வதன் மூலம் பல நோய்களை (H1NIஉள்பட)நம் உலகை விட்டு கை கழுவலாம்
திரு. தமிழ்ச் செல்வன்ஜீ
உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.
Post a Comment