வேகமாகச் சுருங்கிவரும் விளைநிலங்கள், கடுமையான ஆட்பற்றாக்குறை, வீழ்ந்துவரும் வருமானம் போன்ற காரணங்களால் விவசாயத்தைத் தொடரத்தான் வேண்டுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. “குறுநில விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைப் பராமரிப்பதே பெரும் சுமையாக மாறிவந்தபோது, டிராக்டரை வாங்குவதற்கு வங்கிக்கடன் தாராளமாகக் கிடைத்ததால் அது அவர்களுக்கு ஒரு மாற்றாக முதலில் தோன் றியது. ஆனால் மாதாமாதம் கடனைத் திருப்பிக் கட்டுவது இயலாததாக மாறி, நிலத்தையே விற்கவேண்டிய நிலைக்கு பல விவசாயிகள் தள்ளப்பட்டனர்” என்கிறார் அகமதாபாதிலுள்ள தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிதின் மௌரியா.
கருவி உருவான விதம்
விவசாயிகளுக்குச் சொந்தமான நிலம் ஒரு ஏக்கரோ, 10 ஏக்கர்களோ உழுவதையும் களை எடுப்பதையும் அவர்கள் தொடர்ந்து செய்தாக வேண்டும். ஆட்பற்றாக்குறையைச் சமாளிக்க மகாராஷ்ட்ர மாநில ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி கோபால் பிஸே உருவாக்கிய கிருஷிராஜா என்ற சைக்கிள் களை எடுப்புக் கருவிக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உழவு மாடுகளை வாங்கக்கூட இயலாத நிலையில் இம்மாதிரி ஒரு கருவியைத் தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார் பிஸே.
“எங்களுக்குச் சொந்தமான 0.8 ஹெக்டேர் நிலம் வளமான பூமிதான். கிணறு தோண்டுவதற்கு ஆட்களை அமர்த்த வசதி இல்லாததால் நானும் என் மனைவியுமே சிரமப்பட்டு ஒரு கிணற்றைத் தோண்டினோம். ஒரு நாள் ஒரு சைக்கிளில் சில மாவு மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு வியாபாரியைப் பார்த்ததும் உழவுக்குப் பயன்படும் வகையில் சைக்கிளை மாற்றியமைக்கும் யோசனை எனக்கு வந்தது. என்னை மாதிரியோர் ஏழை விவசாயிக்கு ஒரு ஜோடி உழவு மாடுகளைவிட ஒரு சைக்கிளைப் பராமரிப்பது கட்டுப்படியாகக் கூடியது. உழவு மாடுகளுக்குப் பதிலாக அவை செய்யக் கூடிய வேலைகளைச் செய்யும் வகையில் ஒரு சைக்கிளின் முன் சக்கரம், அச்சு, ஹாண்டில்பார் ஆகியவற்றை மாற்றியமைத்தேன்” என்கிறார் கோபால் பிஸே.
விடாமுயற்சிக்குப் பலன்
களையெடுப்பதற்கும் உழுவதற்கும் தனித்தனியான உபகருவிகளை கிருஷி ராஜாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். “சைக்கிளை நான் இம்மாதிரி மாற்றி யமைப்பதைப் பார்த்து மற்ற விவசாயிகள் முதலில் கேலியாகச் சிரித்தனர். ஆனால் நான் விடா முயற்சியுடன் பாடுபட்டேன். கடைசியில் என் உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது. இன்று கிருஷி ராஜாவுக்கு உள்ளூர் சந்தையில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது” என்கிறார் பிஸே பெரு மையுடன். இக்கருவியைக் கொண்டு அவ்வளவாக இறுக்கம் இல்லாத மண்ணை ஓரடி ஆழம் வரை உழமுடியும். ஜல்கான் மாவட்டத்தில் 200 விவசாயிகள் உழவு மாடுகளை விட்டுவிட்டு, கிருஷிராஜாவுக்கு மாறிவிட்டனர்
மேற்கொண்டு தகவல் வேண்டுவோர்
திரு கோபால் பிஸேயுடன் (9970521044) டாக்டர். நிதின் மௌரியாவுடன் (079/26732456) தொடர்பு கொள்ளலாம்.
(தகவல் & புகைப்படம் : தி இந்து). தமிழாக்கம் -பேராசிரியர் கே. ராஜு தீக்கதீர்



குளிர் காலத்தில் நீர் குறைவாக செல்வதால் கரைமட்டதிற்கும் நீர் மட்டதிற்கும் உள்ள இடைவெளி 6-7 மீட்டர் இருக்கும். மணல் கலந்து இருக்கும் மண். சரிவு சில இடங்களில் செங்குத்தாகவும் சில இடங்களில் உள்வாங்கியும் இருக்கும்.
பகுதிக்கு மேல் படகுகள் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நீரில் முழ்கடித்தது. இதுவரை 5 முறை முழுவதுமாக முழ்கியுள்ளது. இறுதியான வெற்றியைக் காண செப்டம்பர் வரை வெள்ள அரிப்பிற்கும், மார்சு வரை நீர் மட்ட குறைவால் ஏற்படும் மண் சரிவிற்கும் காத்திருக்க வேண்டும்.
இந்தப் பொழுது வரை மண் அரிப்பு ஏற்படாமல் வெட்டிவேர் அந்தப் பகுதியை காப்பாற்றியுள்ளது என்பதை மேலேயுள்ள படம் விளக்கம் தரும்.



தாய்மொழியில் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு தாவர வகைப்பாடுகள், அவற்றை அடையாளம் காணும் முறை பற்றி அறிய இந்நூல் பெரிதும் உதவும். எளிய உதாரணங்களுடன் படவிளக்கங்கள், இணைய வலைதளங்கள் பற்றிய குறிப்புக்கள் இருப்பதால் அனைவருக்குமே இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்.





நீர் எடுக்கும் முறை.
நீர் பற்றிய மிகத் தெளிவான உண்மை.
அவை மிக பயனுள்ளதாக இருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். பொதுவாக இவை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வெயில் மற்றும் குளிர் இரண்டையும் தாங்கி வளர்வதாலும், பால் குறைந்த பட்சம் 10 - 15 லிட்டர் வரை கறப்பதாலும் நம் பகுதியில் லாபகரமாக பாராமரிக்க முடியும் என்பது அவரது கணிப்பு.
ஆப்ரிக்காவின் பஞ்சம் தொடங்கி இந்தியாவின் விவசாய தற்கொலைகளுக்கு காரணம் மிக தெளிவாக இருந்தது. அதனை உங்களிடம் காட்சியாக வைத்து, மழைகாலம் ஆரம்பமாகவுள்ளது உங்களால் ஆன மரம் நடும் முயற்சிகளை உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான எதிர்
திரு.பிரஷாந் அவர்களை அவரது பள்ளிக்கூட நாட்களிலிருந்தே நன்கு அறிவேன். சென்ற மாதம் திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிவானவுடன் என்னிடம் அவர்களது குடும்பம் சார்பாக வரும் விருந்தினர்களுக்கு மரக் கன்றுகளை இலவசமாக அளிக்க விரும்புவதாக கூறியபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.



