Thursday, December 3, 2009

போபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.

25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் மறக்க முடியாத மிக மோசமான விபத்து போபால் விஷவாயு விபத்து. இன்றைய இளைஞர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் போபால் நகரில் ஏற்பட்ட விபத்து மிக மோசமான ஒன்று. போபால் நகரத்திலிருந்த பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சிகொல்லி மருந்துகளை தயார் செய்து வந்தது. அங்கிருந்த ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு வெளியேற்றத்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உறக்கத்திலேயே இறந்தனர் மேலும் நிறைய மக்கள் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்க்கு ஆளாயினர். மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுச் சுழல் மாசுபாட்டால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த குழந்தையின் இறப்பிற்கு யார் காரணம்.
பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தங்கள் லாபவெறிக்கு சுகாதாரகேடுகள் உண்டாக்கும் தொழிற்சாலைகளை நிறுவி பல சுகாதார பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றன. நமது ஆட்சியாளர்களும் தொழிலதிபர்களும் அந்நிய முதலீடு, ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு என செய்திகளை தருகின்றனர். ஆனால் பிரச்சனை வரும் போதுதான் விளைவுகளை நாம் ஆராய்கிறோம். அதனைவிடுத்து ஆரம்பத்திலேயே இவைகளை கண்டறிந்தால் இழப்புக்களைத் தவிர்த்து வளமான இந்தியாவை காணமுடியும்.

2 comments:

சவுக்கு said...

இது தொடர்பான இந்த பதிவையும் பாருங்கள்
http://www.savukku.net/2009/12/25.html

வின்சென்ட். said...

திரு. சவுக்கு

உங்கள் வருகைக்கும் மிகத் தெளிவான ஒரு பதிவின் தொடர்பையும் தந்ததிற்கு மிக்க நன்றி.அவசியம் அனைவ்வரும் படிக்க வேண்டிய பதிவு.