Saturday, November 28, 2009

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் 99% வெட்டி வேரை தனி பயிராக வளர்த்தால் (வேருக்காக) லாபம் கிடைக்குமா? எவ்வளவு வருமானம் ? எத்தனை நாட்களில் ? யாரிடம் விற்பது ? என்பது பற்றித்தான் இருக்கும். பொதுவாக வளர்ச்சி நன்றாக இருப்பினும் மண்ணின் தன்மை, நீர் ஆகியவற்றைப் பொறுத்து வேரின் நீளமும் அதன் அடர்த்தியும் இருக்கும். எனவே தோண்டி எடுப்பதற்கு நிறைய ஆட்கூலியாகும். தவிர மண்ணின் தன்மையைப் பொறுத்து வேர்கள் அறுந்துவிடாமல் எடுக்க வேண்டும். சோதனைக்காக பெரிய பையில் வளர்த்த வெட்டி வேர்.
மிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

5 comments:

kuppusamy said...

்நன்றி திரு வின்சண்ட் அவர்களே. அந்தப் பையின் விலை, உள்ளே போடும் பொருள்களின் விலை விபரம், மற்றும் கிடைக்கும் இடம் ஆகியவை தெறிவித்திருந்தால் உபயோகமாக இருக்கும். நாற்று நீங்களே கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி.

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
வின்சென்ட். said...

திரு.குப்புச்சாமி அவர்களுக்கு

உங்கள் வருகைக்கு நன்றி.அரிசி அல்லது சிமெண்ட் சாக்குப் பையாக இருந்தால் அதிக பட்சம் ரூ.2/=,தென்னை நார் கழிவு கிலோ ரூ.4 - 6 (Ec <1), மண்புழு உரம் கிலோ ரூ.4 - 6.

கபீஷ் said...

நல்ல தகவல். நன்றி

வின்சென்ட். said...

திரு.கபீஷ்

உங்கள் வருகைக்கு நன்றி.