சில எளிய உபகரணங்களைக் கொண்டு சில கிரியைகளை செய்வதால் நேரம், மருத்துவ செலவு, போன்றவைகளை வெகுவாகக் குறைத்து உடல் உபாதையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம். நவம்பர் - ஜனவரி மாதங்கள் வரை பனிகாலமாக இருப்பதால் சளி, கபம், சைனஸ், ஆஸ்தமா போன்ற தொல்லைகளால் அநேகர் அவதிபடுவதை பார்த்திருக்கிறேன். இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமாய் தூக்கத்தை இழக்கும் நபர்களும் உண்டு. குறிப்பாக இந்த பருவத்திலும் குளிர்பதன அறையில் இருந்து வேலை செய்பவர்களுக்கு தொடர் ‘தும்மல்’ தவிர்க்க முடியாதது. வாழ்கை முறை, உணவு முறை மாறியதும் காரணம். நமது பாரம்பரிய முறையில் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு இந்த “ஜல நேத்தி” என்னும் மூக்கு கழுவும் கிரியைதான். சுமார் 1 அல்லது 2 மேசை கரண்டி உப்பை மிதமான வெப்பநிலையிலுள்ள சுத்தமான நீரில் நன்கு கலக்கி மேற்கண்ட குவளையில் ஊற்றி உடம்பை சற்று வளைத்து முன்நோக்கி வைத்து தலையை சற்று சாய்த்து மூக்கு துவாரத்தில் குவளையின் துவாரத்தை பொருத்திவிட்டால் நீர் அடைப்பில்லாமல் இருந்தால் எளிதாக அடுத்த துவாரத்தில் வந்துவிடும்.

சளி இருந்தால் அதனையும் சவ்வூடு பரவல் (Osmosis) முறையில் அடர்த்தியின் காரணமாய் இழுத்துகொண்டு வந்துவிடும். நீர் மூக்கினுள் செல்லும்போது வாய் வழியாக சுவாசிக்கவும்.

பிறகு மாற்றி அடுத்த துவாரத்தில் வைத்து செய்ய வேண்டும். உறிஞ்சக்கூடாது. குளிர்ந்த நீரை ஆரம்பத்தில் தவிர்க்கவும். சிலருக்கு உடனடியாக நீர் வெளிவராது பழக பழக சரியாகிவிடும். இல்லையெனில் அனுபவசாலிகளின் மேற்பார்வையில் செய்து பழகவும். இது பாரம்பரிய முறை இருப்பினும் கவனம் தேவை.ரூ.15/= விலையில் சர்வோதய சங்கக் கடைகளில் இக்குவளை கிடைக்கும்.
5 comments:
Intha kuvalai enge kidakum?
Thagaval thanthaal nanraga irukum.
நல்ல உபயோகமன தகவல், இதை உபயோகிப்பதால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா..?
திரு. ரவிகுமார்
திரு. ஈர வெங்காயம்
உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.இக்குவளை எல்லா கதர் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். பக்க விளைவுகள் எனக்கு தெரிந்த அளவிற்கு இல்லை. தும்மல் காணமாய் (காரணம் ஒவ்வாமை)ஐஸ் க்ரீமை தவிர்த்த என் நண்பர் கிரியை ஆரம்பித்த சில நாட்களிலேயே ஐஸ் க்ரீம் சாப்பிட ஆரம்பித்தார்.
புதிதாக இருக்கு.
15 ரூபாயில் மருந்தா? இந்த காலத்திலும் இப்படி சில ஆச்சரியங்கள்.
திரு.வடுவூர் குமார்
உங்கள் வருகைக்கு நன்றி.
"புதிதாக இருக்கு".
மிகப் பழையது.
"15 ரூபாயில் மருந்தா?"
மருந்து என்பதை விட தீர்வு எனக் கூறலாம்.
Post a Comment