Friday, December 11, 2009

மரத்தை அசுரத்தனமாக அறுக்கும் டிராக்டர்.

அரை நிமிடத்தில் மரத்தை அறுத்து பட்டையையும் உரித்து அளவிற்கு துண்டும் செய்துவிடுகிறது இந்த டிராக்டர் போன்ற வண்டி. ஆஸ்திரேலியாவில் இதனை பயன்படுத்துவதாக அறிந்தேன். இவைகள் நம் நாட்டிற்கும் நிச்சயம் வரும். பாதிப்புக்கள்/ நன்மைகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் ஆள் பற்றாகுறையை நீக்கினாலும் மறுபுறும் இதன் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நீங்களும் அதன் அசுர வேகத்தை பாருங்களேன்.

9 comments:

Anonymous said...

excellent. good work. hats off to u for bringing this video coverage

வின்சென்ட். said...

திரு, அனானி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Unknown said...

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பல வருடங்கள் வளர்ந்த மரம் வீழ்வது...

மிக வேதனையாக..உள்ளது நண்பரெ...

பகிர்வுக்கு நன்றி

வின்சென்ட். said...

திரு.பேரரசன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
"மிக வேதனையாக ..உள்ளது" உண்மை.

KABEER ANBAN said...

ஒரு வேளை இது குறைந்த ஃபிரேம்களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

[பூக்கள் வேகமாக மலர்வது சூரியன் கிடுகிடுவென்று வானத்தில் ஏறுவது போன்ற படங்கள் அவ்வகையில் சேர்ந்தவையே.]

அப்படி இல்லாமல் தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் அசுர வேக எந்திரமானால் மிகவும் கவலை தரும் விஷயமே.

நல்ல தகவலுக்கு நன்றி

வின்சென்ட். said...

திரு.கபீரன்பன்
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

"ஒரு வேளை இது குறைந்த ஃபிரேம்களில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது".

நீங்கள் கூறுவது போலவும் இருக்கலாம்.

Thekkikattan|தெகா said...

அன்புள்ள வின்சென்ட்,

இப்பொழுதுதான் உங்களுக்கு இது பார்க்கக் கிடைக்கிறதா? இது வரையிலும் கிடைக்காமல் இருந்ததும் ஒரு விதத்தில் நல்லதுதான். இது போல இன்னும் அசுர வேகத்தில் இயற்கையை நாசமடிக்கச் செய்யும் இயந்திரங்கள் மேற்குலகில் பல உண்டு, அவைகளை விளையாட்டாகவே, joy stickகளைக் கொண்டு உருட்டி விளையாண்டு பல நாச வேலைகளை செய்யச் செய்யலாம்.

முன்னால் அமெரிக்கா துணை ஜனாதிபதி அல்கோர் தனது 'an inconvenient truth" என்ற டாகுமெண்டரியில் இது போன்ற நவீன இயந்திரங்களை காட்டிச் சொல்வார், இவைகளுக்கு முன்னால் ஈடு கொடுக்குமளவில் நம்மிடம் (இயற்கையிடம்) கையிருப்பு இல்லையென... :((

Thekkikattan|தெகா said...

மேலும் ஒரு தகவல், டிஸ்கவரி தொலைகாட்சியில் இதனைப் பற்றியே நிகழ்ச்சிகள் உண்டே, அதனை அங்கு ஒளிபரப்புகிறார்களா எனத் தெரியவில்லை.

சந்தேகமே வேண்டாம், அதி விரைவில் அகற்றுவதோடு நான்கைந்து மரங்களை ஒன்றாக அலேக்காக தூக்கி குச்சிகளைப் போல அடுக்குவது, வாகனங்களில் ஏற்றுவதும் பார்க்க மிகவும் விளையாட்டாகவும், பிரமிப்பாகவும் இருக்கும்... of course, வேதனையாகவும் தான்....

வின்சென்ட். said...

திரு.தெகா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.சென்ற மாதம் ஒரு கூட்டத்தில் மரம் அறுக்கும் மின்யந்திரத்தை (Electric Saw)பற்றிய படதை பார்த்தனர்.சாதாரணமான அதற்கே அவர்கள் பிரமிப்பு அடைந்தனர். அவர்களுக்காக இந்த பதிவை தந்தேன்.முன்னேறிய நாடுகள் ஒரு சில வருடங்களில் நாம் அனுமதி தந்தால் அல்லது ஏமாந்தால் நமது காடுகளை முடித்துவிடுவார்கள் என்பதை நாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற பதிவுகள் தேவைப்படுகின்றன.