Friday, November 6, 2009

"பூட் ஜொலோகியா" - உலகின் மிக காரமான மிளகாய்


கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகக் காரமான மிளகாய் என்று 2006 இல் இடம் பெற்ற "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia) என்ற மிளகாயை சில வருட தேடலுக்குப் பின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானதால் இங்கு வருமா? வராதா? என்ற சந்தேகத்தால் விட்டு விட்டேன். ஆனால் TNAU வில் நடைபெறும் வேளாண்மை அறிவியல் மைய கண்காட்சியில் வடகிழக்கு பிராந்திய அரங்கில் பார்த்த போது ஆவல் மிகுதியில் இது பூட் ஜொலோகியாவா? என்று கேட்டதும் அந்த விஞ்ஞானி மகிழ்ச்சியுடன் அடுத்த 20 நிமிடங்கள் எனக்காக விளக்கம் தந்தார். அருகில் முகர்ந்து பார்த்தாலே காரத்தின் நெடி..

எனது பழைய பதிவை காண "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia)

விதைகள் வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.
The Director,
ICAR (RC) for NEH Region,
Umiam - 793 103
Meghalaya.
Phone : 0364 - 2570257

2 comments:

Muruganandan M.K. said...

சுவார்ஸமான தகவலாக இருக்கிறது.
கானல் கொச்சி என சொல்வது இதனைத்தானா?
கானல் கொச்சி என்பது மிகச் சிறியது 1-2 செமி தான் அருக்கும். இது பெரியது போலிருக்கிறது

வின்சென்ட். said...

திரு.Dr.எம்.கே.முருகானந்தன்

உங்கள் வருகைக்கு நன்றி.இந்தப் பகுதியில் அதனை ஊசி மிளகாய் என்று அழைக்கிறார்கள். அதுவும் மிக காரமானதாக இருக்கும். இதன் அளவு மிக அதிகம். பூட் ஜொலோகியாவின் கார அளவு 10,01,304 SHU ஆகும். இதனை அடுத்து வரும் இனம் ரெட் சவீனா (Red Savina) என்ற மிளகாய் கார அளவு 5,77,000 SHU ஆகும்.