Saturday, November 1, 2008

உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) 2008ஆம் ஆண்டு அறிக்கை

உலக பொருளாதாரம் மிக மோசமான சிக்கலில் இருக்கும்போது உலக வனஉயிர் நிதியம் (World Wildlife Fund (WWF)) நிச்சயம் வரபோகின்ற இயற்கை சிக்கலைப் பற்றி எச்சரித்துள்ளனர். இயற்கை வளங்களை அளவிற்கதிகமாக சுரண்டினால் வருங்காலத்தில் சுழலியல் தொடர்பான கடன் சுமையை உலகம் எதிர்நோக்க வேண்டிவருமென எச்சரித்துள்ளனர். இச்சுமை தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிகமிக மோசமானதாக இருக்குமென்கின்றனர்.

1998 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை “வாழ்கின்ற உலகம்” பற்றி வெளியிடப்படும் இந்த அறிக்கை பொதுவாக எல்லோராலும் நம்பகத் தன்மையுள்ள மிக சரியான அறிக்கையென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 2008ஆம் ஆண்டு அறிக்கையை அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டனர். இயற்கை மூலதனங்களான காடுகள், தண்ணீர், மண்வளம், பல்லுயிர்வகைகள் மீதான மனிதனின் தேவைகள் அளவிற்கு மிக அதிகமாக இருப்பதால் இவ்வளங்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் இப்புவியின் திறன் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டது என கூறி இத்தேவைகள் இப்படியே தொடர்ந்தால் 2030 ஆண்டுகளின் மத்தியில் இதே போன்ற இரண்டு உலகங்கள் தேவைபடும் என்று இவ்வமைப்பின் இயக்குனர் திரு.ஜேம்ஸ் லீபே கூறியுள்ளார்.
ஒவ்வோராண்டும் இயற்கையின் மாற்றத்தால் ஏற்படும் இழப்புக்களை சுனாமி, காத்தரீனா முதல் நேற்றைய பாகிஸ்தான் நிலநடுக்கம் வரை கணக்கிட்டால் நிச்சயம் வருங்காலம் தற்போதுள்ள பொருளாதாரச் சிக்கலை விட மிக மோசமானதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

"The Earth is neither an ecosystem to be preserved, nor a quarry to be exploited for selfish and short-range economic reasons, but a garden to be cultivated for the development of its own potentialities and the potentialities of the human species".. RENE DUBOS
மேலும் முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள்.
Source:Graph WWF/Ca

No comments: