Tuesday, August 19, 2008

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா காலமானார்.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா தனது 95 வது வயதில் 16-08-2008 அன்று காலமானார். ஆரம்பத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து பின்பு விலகி திரும்ப தனது குடும்பப் பண்ணையில் சுமார் 30 ஆண்டு காலம் மிக குறைந்த வெளியுலக தொடர்பு வைத்து மிக சிறந்த முறையில் நிலத்தை உழவு செய்யாமல், குறைந்த நீரில், இரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து, களை மருந்து என இன்றைய பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்யும் எதையும் செய்யாமல், பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்யும் அளவிற்கு மகசூல் எடுத்து இயற்கை வேளாண்மை சிறந்தது என நிருபித்துள்ளார்.


இன்று இவரது விவசாய முறை நிறைய வளர்ந்த நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நாம் ? மிகப் பெரிய கேள்விக் குறிதான். காரணம் வெகுஜன ஊடகங்களும், பன்னாட்டு கம்பெனிகளும், நிதி நிறுவனங்களும், பல்கலைகழகங்களும் உணவுப் பற்றாக்குறை வரும் என பயமுறுத்தி மக்கள் மனதில் “இது முடியாது” என பதிய வைப்பதும் இதில் ஒன்று.

இவரது விதை மண் உருண்டை (Seed ball ) முறையை பெங்களுரு நகரில் பயன்படுத்தி மிக பெரிய அளவில் நிறைய நிறுவனங்களும், பள்ளி குழந்தைகளும்,பொதுமக்களும் பொது இடங்களில் மரம் வளர்க்கவுள்ளனர். மேலும் விபரம் அறிய http://www.millionseedballs.org/ பார்க்கவும்.

அண்மை காலத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்ததும், என்னுள் ஒரு விழிப்புணர்வைத் தந்ததும் இவர் எழுதிய “ THE ONE-STRAW REVOLUTION” தான். 10 முறைக்கு மேல் இந்தியாவில் மறுபதிப்பு வந்துள்ளது. தமிழில் இது “ ஒற்றை வைக்கோல் புரட்சி ” என வெளிவந்துள்ளது. உலக விவசாயத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நூல்.
இன்றைய இளைய தலைமுறை அவசியம் பொறுமையுடன் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்
Other India Bookstore,
Above Mapusa Clinic,
Mapusa -403 507
Goa
India.
Tel :91- 832 - 2262206
e-mail: oib@sancharnet.in

இவரது இதர நூல்கள்.

The Road Back to Nature மற்றும்
The Natural Way Of Farming.

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவருக்கு என் அஞ்சலி.

seed ball - bangalore லிங்க் பார்த்தேன் அற்புதம்.இயற்கை வேளாண்மைப்பற்றிய நுட்பம் பலருக்கும் போய் சேருவது மகிழ்ச்சி..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி. நமது ஊடகங்கள் இவரது மறைவு குறித்து செய்திகள் தராதது மிகவும் வருத்ததிற்குரியது.மகான்களை நாம் மறந்து வருகின்றோம் இது தவறு.

ஆயில்யன் said...

//அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
//

அருமை!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கைத்தான் மனிதனுக்கு!

இயற்கையினை மீறி நம்மால் எதுவும் செய்யமுடியும் என்பது பைத்தியக்காரத்தனம்!

/இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா தனது 95 வது வயதில் 16-08-2008 அன்று காலமானார்.//


அஞ்சலி செலுத்துக்கிறேன் !

வின்சென்ட். said...

திரு.ஆயில்யன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Unknown said...

Thiru fukubu avargaluku en irangalai therivitthu kolgiraen.

"Seed Ball " patriya Vizhipunarvu kadnu viyandhen...

Athai patriya en thedalgal theeviramaginradhu.

Intha murayai namadhu thamizhnatilum pinpatra muyarchipom..

Intha thagavalai veliyitta Thiru. Vincent avargaluku nandri...

வின்சென்ட். said...

திரு.குழந்தை

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. விதை மண் உருண்டை முறையை தமிழகத்தில் செய்வது சற்று கடினம் காரணம் மழை பெய்யும் (வடகிழக்கு பருவ மழை)நாட்கள் மிக குறைவு.விதை முளைத்தவுடன் மழை நின்றுவிடும். தென்மேற்கு மழை நாட்கள் அதிகம் அவை தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தருவதில்லை.தென்மேற்கு மழை பெறும் பகுதிகளில் செய்யலாம்.