Tuesday, August 5, 2008

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள்.


ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள் (இன்று ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள்). லட்ச கணக்கான மக்களை தீப்பிழம்புகளால் அழித்த நாள். போர் வெறியின் உச்சம் என்றால் மிகையில்லை. கதிர்வீச்சால் சுற்றுச்சுழல் மாசுபாடு ,மற்றும் நோய்களுக்கும் குறைவில்லை. இவ்வளவையும் கடந்து ஜப்பான் முக்கிய நாடாகிருப்பதும் அந்நாட்டின் நிறுவனங்கள் சுற்றுச்சுழல் பற்றிய அக்கரையுடன் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்வதும் மகிழ்ச்சிதரும் காரியமாகும்.

சடகோ சசாகி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிப்பட்ட போது 2 வயது குழந்தை. ஒருநாள் ஓடிக்கொண்டிருக்கும் போது விழுந்த குழந்தையை மருவத்துவரிடம் அழைத்து சென்ற பெற்றொர் குழந்தை கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தனர். சடகோ சசாகியின் நண்பி 1000 காகித கொக்குகள் செய்தால் கடவுள் நாம் விரும்பியதை தருவார் என கூற சசாகி 664 காகித கொக்குகள் வரை செய்ததாகவும் பின் இயலாமல் இறந்துவிட்டதாகவும் மீதமுள்ளவற்றை நண்பர்கள் செய்து அவரது சவபெட்டியில் வைத்ததாகவும் ஒரு செய்தியும், 1000 காகித கொக்குகளையும் சசாகியே செய்ததாகவும் ஒரு செய்தியும் நிலவுகிறது. எது எப்படியோ குழந்தை தனது 12 வயதில் இறந்துவிட்டது. 1958 ஆண்டு அவருக்கும், அணுகுண்டு வீச்சால் இறந்த மற்ற குழந்தைகளின் நினைவாகவும் தங்க கொக்கு ஒன்றை சடகோ சசாகி தலைக்கு மேல் ஏந்தி நிற்பதை போன்ற ஒரு சிலையை உருவாக்கி அமைதிப்பணியை செய்துவருகின்றனர். சிலையின் கீழுள்ள வாசகம்.
அமெரிக்காவிலுள்ள சிலை.

இன்றும் உலகின் பல பாகங்களிலிருந்து காகித கொக்குகளைச் செய்து ஹிரோஷிமாவிற்கு அனுப்புகின்றனர். இவருக்காக அமெரிக்காவின் சிட்டேல் நகரத்திலும் சிலைவைத்துள்ளனர். அக்குழந்தையின் நினைவாக இப்பதிவை இடுகிறேன்


காகித கொக்கு செய்யும் முறை.

படம் உதவி: பல்வேறு வலைதளங்கள்

3 comments:

Sundararajan P said...

நல்ல பதிவு.

அணு ஆற்றல் ஒப்பந்தம் குறித்து விவாதம் நடந்து வரும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பார்வையில் அணு ஆற்றல் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது. இதற்கான துவக்கப்புள்ளியாக இந்த பதிவு அமையட்டும்.

Anonymous said...

//சசாகி 664 காகித கொக்குகள் வரை செய்ததாகவும் பின் இயலாமல் இறந்துவிட்டதாகவும் மீதமுள்ளவற்றை நண்பர்கள் செய்து அவரது சவபெட்டியில் வைத்ததாகவும்//

நெஜமா பாதிச்சிருசச்சு

தகவலுக்கு நன்றி

வின்சென்ட். said...

திரு.சுந்தரராஜன்
திரு.Hisubash

உங்கள் வருகைக்கு நன்றி.இன்றைய தலைமுறை அணு ஒப்பந்தம், எண்ணெய், பயோடீசல் போன்ற எரிபோருள் பற்றிய ஆய்வுகளையும், விவாதங்களையும் மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் இல்லையேல் ஆயிரமாயிரம் "சசாகி" நிகழ்வுகள் ஏற்படுவதை கண்டிப்பாக தவிர்க்க இயலாது.