"உசேன் போல்ட்” சென்ற வாரம் முழுவதும் உலகத்திலுள்ள எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்தவர், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர். 3 தங்க பதக்கங்களையும் உலக சாதனை நிகழ்த்தி பெற்றிருக்கிறார். இமாலய சாதனை. ஆனால் வெற்றி பெற்றபின் கூறியது “It might change my life, but I won’t change”. அவர் அடுத்து செய்தது மனதை நெகிழ வைத்தது. வெற்றியை மற்ற வீரர்கள் போல் கொண்டாடாமல் ஒலிம்பிக்ஸ் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் சீனாவின் சிஜூவான் மாகாணத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி சுமார் 50,000 டாலர்களை (சுமார் 22 லட்சம் ரூபாய்)வழங்கியுள்ளார். அந்த நல்ல உள்ளத்தை இவ்வலைப் பூ பாராட்டி மேலும் மேலும் சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறது.
ஜமைக்கா மிக சிறிய நாடு. தங்கம் 6 வெள்ளி 3 வெங்கலம் 2 பெற்று 13 வது இடத்தைப் பிடித்துள்ளது. எவ்வளவோ சாதனைகளைச் செய்யும் நம்மால் முடியாததல்ல. மக்களின் இரசனையை கிரிக்கெட் மூலம் திசை திருப்பி நமக்கு தங்கம் வாங்கி தந்த நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை மறக்க வைத்து ஒலிம்பிக்ஸில் கூட விளையாடும் தகுதியை இழக்க வைத்த பெருமை பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளையே சாரும். அதிகநேரம் விளையாடப்படும் கிரிக்கெட் மூலம் நமது மக்களின் உழைக்கும் திறனையும், மின்சாரத்தையும் வீணாக்கி, நாட்டின் பொருளாதாரத்தையும் வீணாக்குகிறாம். ஏதோ சாதனைகள் செய்வதாக படிக்கிறோம், பார்க்கிறோம், விவாதிக்கிறோம். எவ்வளவோ தனிமனித சாதனைகள் செய்த டென்னிஸ் ரோஜர் பெடரர், வில்லியம்ஸ் சகோதரிகள் கால்பந்து வீரர் மெஸ்சி, போன்றவர்கள் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தையே பெரு மதிப்பாய் எண்ணுகிறார்கள்.
நம்மால் முடியும் என்று அதற்கான திசை திருப்பும் ஆரம்ப வேலையை தங்கப் பதக்கமாக பெற்றுத் தந்த திரு.அபினவ் பிந்ராவையும், வெங்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த திரு.விஜேன்தர் குமார், திரு.சுசில்குமாரையும் சேரும். அவர்களுக்கு வாழ்த்துக்கள். திசைமாறுவோம் மேன்மை பெறுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
He is the man.
//“It might change my life, but I won’t change”. அவர் அடுத்து செய்தது மனதை நெகிழ வைத்தது. வெற்றியை மற்ற வீரர்கள் போல் கொண்டாடாமல் ஒலிம்பிக்ஸ் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் சீனாவின் சிஜூவான் மாகாணத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி சுமார் 50,000 டாலர்களை (சுமார் 22 லட்சம் ரூபாய்)வழங்கியுள்ளார். அந்த நல்ல உள்ளத்தை இவ்வலைப் பூ பாராட்டி மேலும் மேலும் சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறது.//
பேர் மட்டும் போல்ட் அல்ல, செயலும் என நிரூபித்திருக்கிறார். எங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
திரு.சதங்கா
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பல தளங்களில் குழந்தைகளுக்கு இந்தியப்பறவை இந்திய விளையாட்டு போன்ற குறிப்புகளில் கிரிக்கெட் இடம்பெறும் அளவுக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. என் தாத்தா அந்த காலத்தில் ஹாக்கி ப்ளேயர்..
திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி
உங்கள் வருகைக்கு நன்றி.விளம்பரம் மற்றும் பணத்தின் வலிமை அத்துடன் புதிதாக "கவர்ச்சி" நடனங்கள் வேறு. "கிரிக்கெட்" போதை, சூதாட்ட விளையாட்டாக மாறிவிட்டது. நமது ஹாக்கி வீரர் தயான் சந்த் ஹிட்லரால் பாராட்டப்பட்டது நமது நாடிற்கும்,தேசீய விளையாட்டான ஹாக்கிக்கும் பெருமை.
Post a Comment