Friday, March 22, 2013

நிகமானந்தா – கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்




மாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், கும்ப் எனுமிடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் கடந்த 2011 பிப்ரவரி 19ஆம் தேதியன்று, உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 2011 ஜூன் 13ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய முறையில் மரணமடைந்தார்.
இந்தியாவின் புண்ணிய நதி காப்பாற்றப்பட வேண்டும், இந்திய விவசாயம் தழைக்க வேண்டும், நாளைய தலை- முறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு புண்ணிய நதியின் புனிதம் காக்க உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த மகான். இவரது தியாகம் சரியான முறையில் மக்களிடம் சென்றடையாதது மிகப்பெரிய துரதிஷ்டம். இந்த இளவயதில்  இலட்சிய நோக்கில் உயிர் துறந்த மகான் நிகமானந்தா அவர்களின் தியாகம் காலத்தால் மறக்கபடலாம் அல்லது மறைக்கப்படலாம். காலம் பதில் தரும்.  இந்த உலக நீர் நாளில் மகான் நிகமானந்தாவிற்கு  இந்த வலைப்பூவின் நினைவஞ்சலி!!!!
 

4 comments:

கோமதி அரசு said...

கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான் நிகமானந்தா அவர்கள் நினைவு அஞ்சலியில் நாங்களும் கலந்து கொள்கிறோம்.
அஞ்சலிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகமானந்தா அவர்களுக்கு அஞ்சலிகள்...

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி.

Kumky said...

ஆழ்ந்த அஞ்சலிகள்.