Tuesday, July 17, 2012

பறவை, மரம் உறவுக்களுக்கு இடையே மனிதன் ?????


டோடோ பறவை
 தாவரங்களுக்கும், பறவைகள்+மிருகங்களுக்கும் உள்ள உறவு ஒன்றுக்கொன்று சார்ந்தது. பறவைகள் மற்றும் மிருகங்களின் உணவுப் பாதையில் சென்று வரும் விதைகளுக்கு முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும். தாவரங்கள் அவற்றிற்கு உணவளித்து பாதுகாப்பதால் நன்றிக் கடனாக அவைகளின் வித்துக்களை எளிதாக முளைக்கச் செய்து காடெங்கும் பரவச் செய்யும். இந்த நிலையில் மனிதன் இவற்றிக்கிடையே நுழையும் போது இரண்டிற்கும் அழிவு சர்வ நிச்சயமாகிறது.

கல்வாரியா மரம்
1970 களில் மொரீஷிஸ் தீவின் கணக்கெடுப்பு ஒன்றில்  வெறும் 13 கல்வாரியா மரங்களே இருந்தன. அவைகள் அனைத்தும் 300 வருட மரங்களாக இருந்தன. தீவிர ஆராய்ச்சியில் அந்த தீவில் வாழ்ந்த டோடோ பறவையின் அழிவிற்கும் இந்த மரத்திற்கும் இருந்த தொடர்பு தெரிய வந்தது. 1500 ஆம் ஆண்டுகளில் மொரீஷிஸ் தீவில் கால்பதித்த ஐரோப்பிய கடலோடிகள் அதிக எடையுள்ள பறக்க முடியாத இந்த பறவையைப் பார்த்தவுடன் அடித்து உண்ண ஆரம்பித்தனர். அவர்களுடன் வந்த பிராணிகளும் அதன் முட்டைகளை ருசி பார்த்தன.   விளைவு மனிதன் கால் பதித்த 100 ஆண்டுகளில் டோடோ பறவை இனம் இந்த உலகை விட்டு மறைந்தது. 1681 ஆண்டு கடைசி டோடோ பறவை தன் உயிரை விட்டது

கல்வாரியா மர விதை
  அதற்கு பின்பு இம்மரங்களின் விதைகளுக்கு முளைப்புத் திறனின்றிப் போனது. காரணம் கல்வாரியா மரவிதைகளை டோடோ பறவைகள் உணவாகக் கொண்டது. அதன் உணவுப் பாதையில் வெளி வந்த விதைகளே முளைப்புத் திறன் பெற்றிருந்தது. தற்சமயம் வான்கோழியின் உதவியுடன் விதைகளை முளைக்க செய்ய முயற்சிகள் நடை பெறுகின்றன. நமது சந்தன மர விதைகளுக்கு இந்த உறவு பொருந்தும். இதுபோன்று எவ்வளவு ஜீவராசிகளை அழித்திருக்கிறோமோ??? கண்ணுக்கு தெரிந்த உயிரினங்கள் சரி!! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள்??? இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.
படங்கள் உதவி : கூகுள்தளம்

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும். அப்போது அவைகள் அழிந்து பல ஆண்டுகள் ஆகியிருப்பது தெரியும்.

நம்மால் திரும்பப்பெற முடியாத பலவற்றை அழித்திருப்பது கவலை தரும்..

வவ்வால் said...

அவசியமான பதிவு.இது போல பல ஜீவராசிகளை அழித்த பெருமை மனிதனுக்கு மட்டுமே சேரும்.

வின்சென்ட். said...

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் போல் நம்மால் திரும்பப் பெற முடியாத பலவற்றை அழித்திருப்பது கவலை தரும் விஷயம் தான் மறுப்பதற்கு இல்லை. அதே போன்று பல ஜீவராசிகளை அழித்த பெருமை மனிதனுக்கு மட்டுமே சேரும் என்பதும் உண்மை

Kousalya Raj said...

படித்த பின் வருத்தமாகிவிட்டது. இப்படியே அரிய பலவற்றை அழித்து விட்டோம்... எப்போது இதை பற்றிய விழிப்புணர்வு மனிதனுக்கு வரும் என்ற ஆதங்கம் மட்டும் மிச்சம் இருக்கிறது!!

பகிர்வுக்கு நன்றிகள் சார்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு...

பகிர்வுக்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

கலாகுமரன் said...

சந்தன மரம் பற்றி சொன்னீர்கள் அது சென்சிடிவ் மரம் என நினைக்கிறேன். அதாவது அதன் அருகில் பப்பாளி போன்ற நீர் உருஞ்சும் மரங்கள் இருந்தால் இம்மரம் பட்டு போய் விடுகின்றன.

மரங்கள் = சுற்றுசுழல் காப்பகங்கள் ஒன்று அழிந்து வரும்போது ஒன்றன் அழிவு நிச்சயம். அற்புதமாக எடுத்து சொன்னீர்கள்.

மரங்களை வெட்டுவதை குறிப்பிட்டால் ரோடு வேண்டாமா? என கேட்கிறார்கள்.

அழிப்பதே அதிகம்..! ஒரு பக்கம் அரசியல் வாதிகள் ஒரு பக்கம் ஆக்கிரமிப்பாளர்கள்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. சந்தன மரம் நன்கு வளரும் வரை வேறு ஒரு மரத்தின் உதவி வேண்டும். தானாக சத்தை எடுக்காது ஒட்டுண்ணி வகையை சார்ந்தது.பொதுவாக வேம்பு, கருவேலமரம் போன்ற கடினத் தன்மையுள்ள மரமாக இருந்தால் நலம்.

"மரங்களை வெட்டுவதை குறிப்பிட்டால்"

நமக்குத் தேவை நகரினுள் மரங்கள். எல்லா பூங்காக்களிலும் புல்தரை அமைக்க லட்சகளில் செலவு செய்கின்றனர். பராமரிப்பும் அதிகம். கிராமத்து கோவில் காடுகள் போன்று ஏன் பூங்காக்களில் காடுகள் போன்று பல்வேறு மரங்களை வளர்த்தக் கூடாது? நகரிலுள்ள எல்லா காலியிடங்களிலும் மரம் வளர்க்கலாமே!! மக்களும் பயன் பெறுவார்களே! சிந்திக்க வேண்டிய நேரமிது.
கணனி பழுது காரணமாக உடனே பதிலு தர இயவில்லை மன்னிக்கவும்.