|
குதிர் பெரியது. |
இந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல்
. இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க ‘எங்க அப்பா குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள் இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து “கம்பெனி” விதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
|
ஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம் |
|
இராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர் |
எளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள உறை பனிவெளியில் அமைந்துள்ள “ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட “உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault)”. பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி “லாக்கர்” போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு “லாக்கர்” என்பது
“புதிர்” தான்.
இன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.
2 comments:
நல்ல தகவல், குதிர் போல இன்னொரு அமைப்பு, வைக்கோல் பிரி கொண்டு சுற்றி சுற்றியே நெல் சேமிக்க ஒரு அமைப்பு உருவாக்குவார்கள், அதற்கு "கோட்டை" என்று எங்க ஊரில் சொல்லுவாங்க,மழை தண்ணீர் கூட உள்ளே இறங்காது. நான் சின்ன வயசில் எங்க வீட்டில கட்டி பார்த்திருக்கேன்.
இப்போ அது போல பார்ப்பதே அரிதாக இருக்கு.
விதைகளை நம்ம நாட்டில் "National Gene Bank (NGB) of the National Bureau of Plant Genetic Resources at New Delhi."இலும், நெல்லுக்கான விதைகள் மணிலா ,பிலிப்பைன்சில் உள்ள IRRI இலும் கிரையோ பிரிசெர்வேஷனில் வைத்திருக்கிறார்கள், சுமார் 150 ஆண்டுகள் உயிரோட இருக்குமாம்.
உங்கள் வருகைக்கு நன்றி. "கோட்டை" பற்றி பதிவிடுங்களேன். எனக்கும் தெரிந்து கொள்ள ஆசை. இது போன்ற விஷயங்களை உபயோகிக்கவில்லை என்றாலும் ஆவணப்படுத்தி வைக்கலாமே. ஆப்ரிக்காவில் கால்நடைகளுக்கு உணவை மண்ணிற்குள் நீர் புகாமல் புதைத்து வைப்பதாக கேள்விப்படிருக்கிறேன்.எப்படி என்று தெரியவில்லை.
Post a Comment