Dr. Debal Deb |
வேத காலத்தில் லட்சங்களிலிருந்தாகக் கூறப்படும் நெல் வகைகள் திரு.R.H.ரிச்சாயா (1960களில் ) காலத்தில் 20,000 குறைந்தது. இன்று (2012இல்) 700 பாரம்பரிய அரிசி வகைகளை வைத்திருக்கும் Dr.திபால் திப் 1997 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவைகளை விதைத்து பாதுகாத்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வசிக்கும் ஏழை விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டவை, சிறப்பான குணங்களை உடையவைகள். வெள்ள சமயங்களில் நீர் தேங்குதல், மற்ற நேரங்களில் நீர் பற்றாக்குறை, உப்பு தன்மையை தாங்கி வளர்பவையாக, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவையாக, சில வகை மணம் நிறைந்ததாக இருக்கின்றன. ஒரு தனி மனித சாதனை என்று கூறலாம். கம்பெனிகளுக்கு பணிவிடை செய்யாமல் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவ்வளவு விதைகளையும் சிறிய இடத்தில் விதைத்து அறுவடை செய்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி அவர்களை பயிர் செய்ய வைத்து வாழ்கையில் ஒளியேற்றி வருகிறார். இந்திய விவசாய தற்கொலைகள் (2011 - 14,027) அதிகமாக ஒருகாரணம் விவசாயிகளிடம் விதை தற்சார்பு இல்லாமையாகும். இந்த விதை தற்சார்பு பரவாலக்கப்பட்டால் இந்திய விவசாயம் பிழைக்கும். இதனை படிக்கும் அன்பர்கள் விதை தற்சார்பு பற்றி உங்களுக்கு தெரிந்ததை பதிவேற்றினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள். Dr.திபால் திப் தலைவராக உள்ள அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://www.cintdis.org/
ஒரு சிறு வீடீயோ காட்சி
விதை காப்பாளர்கள் – (1)
விதை காப்பாளர்கள் – (2)
விதை காப்பாளர்கள் – (4)
4 comments:
இவ்வாறான மனிதர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்...
நீங்கள் கூறுவது மிக்க சரி. விதைகள்தான் தற்சார்பு வாழ்கையை ஏற்படுத்தும்.
பாராட்டப்பட வேண்டிய தனி மனித சாதனை.
தொடர்ந்து விவசாயம் செய்கையில் விதை வாங்குவதில்லை, புதிய ரகம் அறிமுகம் என சொல்லி ,மாற்றி சாகுபடி செய்யும் போது தான் விதை வாங்க வேண்டியதாக உள்ளது.
அரசின் சார்பில் ஜீன் பேங்க் என நடத்துகிறார்கள் ,ஆயிரக்கணக்கில் விதைகளை கிரையோஜெனிக் முறையில் சேமித்து வைத்துள்ளார்கள். அப்படிப்பட்ட ஜீன் பேங்க் , டெல்லியில் உள்ளது.அவர்கள் சொல்வது தனித்தன்மையுடன் கலப்பினம் ஆகாமல் , பயிரிட்டு சேமிக்க நிறைய செலவு ஆகும் என்கிறார்கள். ஒவ்வொரு நெற்கதிரையும் உரைப்போட்டு மூடி வைத்து பாதுகாத்து ,மகரந்த சேர்க்கை நடக்க வைப்பார்களாம்.
தனிநபராக பெரும் நிதியில்லாமல் அப்படி கலப்பினம் ஆகாமல் , பாதுகாப்பாக எப்படி செய்கிறார் என தெரியவில்லை.
உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.
"பயிரிட்டு சேமிக்க நிறைய செலவு ஆகும் என்கிறார்கள். ஒவ்வொரு நெற்கதிரையும் உரைப்போட்டு மூடி வைத்து பாதுகாத்து ,மகரந்த சேர்க்கை நடக்க வைப்பார்களாம்".
பொதுவாக அரசு தங்களின் கீழுள்ள அமைப்புகளின் மூலம் விதை பாதுகாப்பில் 100% தனித்தன்மை வேண்டி விஞ்ஞானிகள் Ex-situ முறையில் மிக பாதுகாப்பாக செய்வார்கள். காரணம் அவர்கள் அந்த விதைகளின் தனித்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம்.
இவர் In-situ முறையில் பலவேறு இடங்களிலுள்ள விவசாயிகளிடம் கொடுத்து வாங்குகிறார். தனித்தன்மை 100% இருக்கும் என்பது சற்று கடினம்.
கீழ்கண்ட வீடீயோ சற்று விளக்கம் தரும். http://www.youtube.com/watch?v=Kypa_ysFFuE&feature=player_embedded
Post a Comment