ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் 1 மணிநேரம் விளக்கை அனைத்து விழிப்புணர்வு
ஏற்படுத்தி வருகிறோம். மிக நல்ல விஷயம். ஆனால் மீண்டும் பழைய நிலைமைக்குத்
திரும்பிவிடுகிறோம். குழந்தைகளுக்கு நாம் எதற்காக செய்கிறோம் என்று கூட தெரியாது.
அவர்களின் முக்கிய டீவி நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கம்
அவர்களுக்கு. அதற்கு பதிலாக வருடம் முழுவதும்
விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சிலமாற்றங்கள் செய்தால் வருடம் அல்ல
வாழ்நாள் முழுவதும் பயன் தரும். உ.த. ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் பள்ளிக்குச்
செல்லுமுன் அழகாக தங்கள் நோட்டு,பாட புத்தகங்களுக்கு அட்டையிட்டு “லேபிள்” ஒட்டுவார்கள். இன்றைய காலத்தில் அவைகள் பெரும்பாலும் கார்டூன் படங்கள்
(விளம்பரம்), நடிகர்களின் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் தாவரவியல்,
விலங்கியல் பெயர்களை அவர்கள் நினைவுகொள்ள கஷ்டப்படுகிறார்கள். அதேபோன்று மழலைப்
பள்ளிகளில் பழம், காய்கறிகளின் படங்களை தனியாக ஒட்ட வைத்து கற்றுதரும் போது மனத்தில்
பதிவு செய்யமுடிவதில்லை. அவர்கள் அனுதினமும் பார்க்கும் போது எளிதில் மனதில் பதிவு
செய்து கொள்வார்கள். மொழி ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இதனை சிறப்பாக செயல்படுத்த
முடியும். இன்னும் இரண்டு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் யாரேனும்
முன்வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
Saturday, March 31, 2012
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சிறப்பான சிந்தித்திச் செயல்படுத்த வேண்டிய அருமையான யோசனைகள்.. பாராட்டுக்கள்..
திருமதி.இராஜராஜேஸ்வரி
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
என்ன மாதிரியான உதவி வேண்டும்னு சொல்லுங்க. நண்பர்களிடம் கேட்கலாம்
திருமதி. விஜி
உங்கள் விசாரிப்புக்கு நன்றி. இதுபோன்று லேபிள்களை பிரிண்ட் செய்து பள்ளிகளில் கொடுத்து பிரபலப்படுத்த வேண்டும்.
Post a Comment