சுமார் 15 வருட காலத்தில் நூற்றுக்கணக்கான சிட்டுக் குருவிகள் வாழ்ந்த எங்கள்
பகுதியிலிருந்து அவைகளை முற்றிலுமாக அகற்றிவிட்டோம் என்று ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து
கொள்ளுகிறேன். திரும்ப கொண்டுவரும்
முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இங்கு வந்து வாழமுடியாமல் போய்விடுமோ? என்ற பயம்
காரணமாக சற்று தாமதப்படுத்தியிருக்கிறேன். இருப்பினும் முயற்சி தொடரும். அவைகளின்
சுறுசுறுப்பு என்னைக் கவரும். புகைபடம் எடுக்க நீண்ட பயணம் மேற் கொள்ளவேண்டி
வந்ததால் ‘நியு சென்சுரி புக்
ஹவுஸின்’ காலென்டரில் அழகான
சிட்டு இருந்தது இங்கே பதிவிடுகிறேன். ஆனால் இந்த நிலைமை தொடரக்கூடாது என்பதே எனது
பிரார்த்தனை. எனது நினைவு தெரிந்து இவைகள் இல்லாமல் போய்விட இன்னும் எத்தனை
ஜீவராசிகளை தெரியாமல் அகற்றியிருக்கிறோம் என்று இயற்கைக்கு மாத்திரமே தெரியும்.
சிட்டுக் குருவிகளை காப்பாற்றுவோம் அதுதான் ஆரோக்கிய சுற்றுச்சூழலின்
அறிகுறி!!!!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இன்றைய தினத்திற்கான பொருத்தமான பதிவு.
கீழே உள்ள லின்கை சொடுக்கி என் பதிவையும் பாருங்கள்/
http://shadiqah.blogspot.in/2012/03/blog-post.html
உங்கள் வருகைக்கு நன்றி. உங்களின் விரிவான கட்டுரை கண்டேன். வாழ்த்துகள்
இப்போதே இந்த நிலையென்றால் வருங்கால சந்ததியினருக்கு...
சிட்டுக்குருவியை புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் வீட்டு வாசலுக்கு சென்றால் போதும் என்ற நிலை மாறி, கூகுளில் தேடியும், காலண்டரில் இருந்தும் எடுக்க வேண்டியதாகிவிட்டது.
சிட்டுகுருவிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பாக தொடர/நடக்க என் வாழ்த்துக்கள்.
திரு.குடந்தை அன்புமணி
திருமதி.கௌசல்யா
உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. நிலைமை நாளுக்குநாள் மோசமாக போய்கொண்டிருக்கிறது. எனது சென்ற ஆண்டுப் பதிவு http://maravalam.blogspot.in/2011/03/blog-post_20.html
இன்னும் எத்தனை ஜீவராசிகளை தெரியாமல் அகற்றியிருக்கிறோம் என்று இயற்கைக்கு மாத்திரமே தெரியும். சிட்டுக் குருவிகளை காப்பாற்றுவோம் அதுதான் ஆரோக்கிய சுற்றுச்சூழலின் அறிகுறி!!!!
அருமையான ஆக்கம்.. பாராட்டுக்கள்.
http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html
சிங்காரச் சிட்டுக்குருவி
திருமதி. இராஜராஜேஸ்வரி
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. மேலும் ஒரு தொடுப்பு தந்ததிற்கு நன்றி.
Post a Comment