Wednesday, March 21, 2012

உலக வன நாள் -2012


வனங்களை வயலாக்கிய நாம் இன்று வயல்களை
வனமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சுற்றுச்சூழல் நன்மைகள் தவிர வணிக நோக்கிலும் மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுவாக தமிழகம் மரம் சார்ந்த தொழில் மற்றும்  தொழிற்சாலைகளை (நெறிபடுத்தப்பட்ட Organized Sector ) கொண்டுள்ளது.  ஆனால் இவைகளுக்கான கச்சாப் பொருளான மரம் பெரிய அளவில் கிடைப்பதில்லை (உ..த ) தீக்குச்சிக்கான மரத்தை நாம் அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 80% அளவில் இறக்குமதி செய்கிறோம். ஆனால் நமக்கு சாதமான சூழ்நிலைஇருப்பதால் நாம் நன்கு மரம் வளர்த்த இயலும். வனபரப்பையும் அதிகரிக்க முடியும். அதற்கான சிறு அறிமுகமே இந்தப் பதிவு. பதிவின் சுருக்கம் கருதி தொடுப்புகள் அளித்திருக்கிறேன்.

தமிழகத்தில் வாய்ப்புக்ககள்.

காகிதம்
தமிழகத்தில் இரு தொழிற்சாலைகள் சிறப்பாக காகித உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இரு தொழிற்சாலைகளுமே நாற்றுக்கள் கொடுப்பதிலிருந்து குறைந்தபட்ச விலை நிர்ணயத்துடன் வாங்கிக் கொள்கிறார்கள். இவைகள் தவிர  சிறுசிறு  நிறுவனங்கள் நிறைய உண்டு.

தமிழ்நாடு காகித ஆலை (TNPL)  கரூர் அருகே

சேஷாயி பேப்பர் அண்டு போர்ட்ஸ்
தொலைபேசி எண்கள் : (04288) 240221-240228

தீக்குச்சி தொழிற்சாலைகள்
தமிழகத்தின் சிறப்பு தீக்குச்சி தொழிற்சாலைகள் என்றால் மிகையில்லை. வங்கிக் கடனுடன் நாற்றுக்களும் தந்து மரங்களை வாங்கவும் செய்கிறார்கள் வாசன் நிறுவனம்.

எரிசக்தி (பயோ-மாஸ் எரிசக்தி )
கடந்த சில ஆண்டுகளாக மரம் மற்றும் விவசாயக் கழிவுகள் மூலம் மின் உற்பத்தி பரவலாக தொடங்கப்படுகிறது. இதுவரை 14 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். தற்போதுள்ள மின்தட்டுப்பாட்டில்  தமிழகத்திற்கு மிகத் தேவையான துறையாக தோன்றுகிறது.

பயோ-டீசல்
மானியத்துடன் ஜெட்ரோபா என்னும் காட்டாமணுக்கு இந்தியாவில் பிரபலபடுத்தப்பட்டது. ஆனால் சிறப்பானதொரு வரவேற்பைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் புங்கன் மற்றும் புன்னை மரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெயும் பயோ-டீசலாக உபயோகிக்க முடியும் என்று வனத்துறையும், தனிநபர்களும் நிருபித்துள்ளனர். ஆனால் இத்துறை நெறிபடுத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. நாட்டின் அந்நிய செலவாணி மிச்சப்படுத்தப்பட வேண்டுமானால் இத்துறை கவனிக்கப்பட வேண்டும்.

மரம் சாரா மற்ற வனப்பொருட்கள்
நெறிபடுத்தப்படாத துறை என்று கூறலாம். ஆனால் உணவு, மருந்து, பிசின்,விதை, இலை (பீடி) பட்டை, பூ, நறுமணப் பொருட்கள், இயற்கைச் சாயம் என்று ஏராளமான பொருட்கள் இதில் அடங்கும். வனவாசிகளின் வாழ்வாதாரம் ஒருபுறமிருக்க வனக் கொள்கை மறுபுறமிருக்க நெறிபடுத்தினால் மாத்திரமே இத்துறை மிக செழிப்பாக வளரும்.

6 comments:

Unknown said...

Sir,

Very good information. I think this can be used in NBNP as one of the signage.

ஆர்வா said...

எத்தனை உபயோகமான பதிவு.. தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பரே..


நட்புடன்
கவிதை காதலன்

வின்சென்ட். said...

Sir

I am very happy to hear from you. Thank you.

வின்சென்ட். said...

திரு. கவிதை காதலன்

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

விஜி said...

நல்ல தகவல்கள். வின்செண்ட் சார் நம்ம ஊரில் மொட்டை மாடி தோட்டம் வளர்ப்பு பற்றி ஏதேனும் பயிற்சி இருந்தால் சொல்லுங்க.

வின்சென்ட். said...

திரு. விஜி
உங்கள் வருகைக்கு நன்றி. Avinasilingham JSS இல் வகுப்பு நடத்தப் போகிறார்கள். ஆனால் அதில் அதிகம் பெண்களே உள்ளனர். எதற்கும் உங்கள் எண்ணை மின்னஞ்சல் செய்யுங்கள்.