Friday, November 25, 2011

தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.


அழியும் தருவாயில் இரயுமன்துறை கிராமம்
 வெட்டிவேர் உதவியுடன் பிரேசில் நாட்டின் சா போலோ மாநிலத்திலுள்ள பெர்டியோகா என்ற கடற்கரை குடியிருப்பு பகுதியை கடலரிப்பிலிருந்து காப்பாறும் பணியை பொறியாளார். லூயிஸ் லுக்கினா அவர்கள் விளக்கிய போது மனம் ஏனோ இரயுமன்துறை கிராமத்தை நினைத்து வருந்தியது. 
கடலரிப்பில்  'பெர்டியோகா' கடற்கரை
தென்னை நார் விரிப்பில் வெட்டிவேர் நடப்பட்டுள்ளது. வருடம் 2009
சற்று வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
நன்கு வளர்ந்த நிலையில் வெட்டிவேர்
சுவர் போன்ற அமைப்பில் வெட்டிவேர்.   பொறியாளார். லூயிஸ் லுக்கினா ICV-5   முடித்து சென்ற பின் 2011 நவம்பர்  மாதம் 4 தேதி வலையேற்றியது.
 தென்னைநாரில் செய்யப்படும் ஜியோ டெக்ஸ் (Geo Tex) (பொள்ளாச்சி இதற்கு பெயர் பெற்றது )  என்ற விரிப்பைப் பயன்படுத்தி வெட்டிவேரை நட்டு அவர்கள் கடலரிப்பிலிருந்து குடியிருப்புக்களை காப்பாற்றி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. முக்கிய பொருட்களான வெட்டிவேரும், தென்னைநாரும் நம்மிடம் இருந்தும் உபயோகிக்காமல் இருப்பது அறியாமையா ? அல்லது ???? முடிவு நம் கையில்தான் உள்ளது. வெட்டிவேர் பாமரனின் கையிலிருந்து பெரிய கம்பெனிகளின் கைக்கு மாறியிருப்பது நிச்சயம் மிக பெரிய மாறுதல்களை உலககெங்கும் ஏற்படுத்தும். ஆனால் நாம் அதிலிருந்து பாடம் கற்கப் போகிறோமா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
 

6 comments:

T.Sivaraman said...

Dear Sir,

Very Sad! Unfortunately there is no one in government who takes initiative and works for society. Maybe because there is no appreciation!.

Mr.P.Sainath of The Hindu sarcastically and usually says govt. acts only if anything affects the elite section of the society. Why the hell will they be worried about the poor fisherfolks.

Atleast now if the govt. acts we can save the remaining shoreline.

Vetiver can also be planted in:
a) slopes of nilgris where there was loss of lives before a few months.
b) improving water quality by vetiver floats in cooum etc.

Children are the future, and if you are able to convey to them the above advantages, then there is hope.

Best wishes and keep blogging sir!
T.Sivaraman

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! சுற்றுப்புற சூழல் குறித்த தங்கள் எழுத்துப் பணிக்கு எனது வாழ்த்துக்கள்!

வின்சென்ட். said...

திரு.T.சிவராமன்
தி.தமிழ் இளங்கோ

உங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு.பிரபு கிருஷ்ணா

"சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே" பதிவில் மண்,மரம், மழை,மனிதனை குறிப்பிட்டு பெருமை சேர்த்ததிற்கும் நான் அறியாத மிக நல்ல வலைப்பூக்களை அறிய வைத்தமைக்கும் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

R kumar said...

All the contents published in this site are awesome. It's very helpful and interesting. Glad to take a note of the work/concerns of people like you do/have to save the nature. Keep up all your good work, and many thanks for the same.

வின்சென்ட். said...

திரு.R.குமார்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.