Wednesday, November 9, 2011

இனிய தமிழ் மக்களே உறங்கியது போதும், விழித்தெழுங்கள்.

HER ROYAL HIGHNESS PRINCESS MAHA CHAKRI SIRINDHORN
 தாய்லாந்து நாட்டின் HRH. இளவரசி மகா சக்ரி ஸ்ரீரின்ந்தான் அவர்களால் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு (ICV-5 ) லக்னோ நகரில் சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ் (Central Institute of Medicinal and Aromatic Plants ) வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொச்சியில் நடந்த மாநாட்டைக் காட்டிலும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள், பெரிய கம்பெனிகளின் கட்டுமான பணிகளை படங்களாக, வீடியோவாக காண்பித்து பிரமிப்பு ஏற்படுத்தினர்.
 சென்ட்ரல் இன்ஸ்டிடூட் ஆப் மெடிசினல் அண்டு அரோமாடிக் பிளாண்ட்ஸ்
 மாநாடு முடிந்தவுடன் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்று மனதில் தோன்றியது. தமிழ் பெயரான வெட்டிவேர்”  என்று உலகம் முழுவதும் அறியப்பட்டாலும், பல நாடுகள் வெட்டிவேர் உதவியுடன் பில்லியன் டாலர்களை சேமித்தாலும், ஏழை எளிய மக்களுக்கு ஆப்ரிக்க நாடுகளில் உறுதுணையாக இருந்தாலும் இதன் பிறப்பிடமான தமிழ்நாட்டில் எனது பாட்டி குடிநீரில் இதனை போட்டிருப்பார்கள், எனது தாத்தா வெட்டிவேர் விசிறி வைத்திருப்பார், திருவிழாக்களில் சர்பத்தில் கலந்திருப்பார்கள்  என்ற எளிய உபயோக முறைகளை சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால் 1000 + கி.மீ நீள கடற்கரையை கடலரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம், குறைந்த மழையளவில் குறுகிய காலத்தில் நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம், சுற்றுலாப் பயணிகளை கவரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்ற முக்கிய மலை வாசஸ்தலங்களின் சாலைகளை பருவ மழையின் போது பாதுகாப்பது, கிராமப்புற சாலைகளை அதிக செலவின்றி பராமரிப்பு செய்தல், குளம், குட்டைகளில் அதிக மண் சேராமல் தடுத்தல் போன்ற காரியங்களுக்கு வெட்டிவேரை சிறப்பாகப் பயன்படுத்த முடியும். வெட்டிவேரை மையப்படுத்தி பையோ எஞ்சினியரிங் (Bio-engineering ), பையோ ரெமடியேஷன் (Bio-remediation) பையோ வால் (Bio wall ) என்று வார்த்தைகள் மற்றநாடுகளில் பவனி வர நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயம் உறக்கத்திலிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். எப்போது விழிக்கப் போகிறோம் ????

5 comments:

ராமலக்ஷ்மி said...

ஆம் எளிய உபயோகங்களைதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வைத் தரும் நல்ல பகிர்வு.

வின்சென்ட். said...

திருமதி.ராமலக்ஷ்மி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

ரசிகன் said...

அய்யா, வணக்கம். நலமா?

இணையம் பலம் வாய்ந்த ஒரு ஊடகம். இணையப் பயன்பாட்டாளர்கள் அதிகரித்து வரும் சூழலிலும், இணையம் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருப்பதை மறுக்க முடியாது. நானறிந்தவரை, வெட்டிவேரை பற்றி நிறைய, அரிய தகவல் அறிந்தவர் நீங்கள். நீங்கள் வெட்டிவேர் குறித்த புத்தகம் எழுதலாமே. இணையம் அறியாதவர்களையும் அது அடையக் கூடும். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் பயன்படும். யோசித்துப் பாருங்கள்.

T.Sivaraman said...

Dear Sir,

I planted vetiver in my garden after looking at your earlier blogs and vetiver.org. The water level in the well has definitely raised (this year the rains were also plenty is another thing). Saplings planted near vetiver always grow well, maybe as their roots are able to breath well.

But with regards to: வெட்டிவேரை மையப்படுத்தி பையோ எஞ்சினியரிங் (Bio-engineering ), பையோ ரெமடியேஷன் (Bio-remediation) பையோ வால் (Bio wall ) என்று வார்த்தைகள் மற்றநாடுகளில் பவனி வர நாம் எங்கிருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயம் உறக்கத்திலிருக்கிறோம் என்று சொல்லிவிடலாம். எப்போது விழிக்கப் போகிறோம் ???? I am not sure I may be able to understand even if I am awake!!

Best Wishes,
T.Sivaraman

வின்சென்ட். said...

Mr. T.Sivaraman

Thank you very much for your observation really it gives me joy to hear. Regarding "Bio" things I feel we are still in deep sleep.