Wednesday, October 19, 2011

வெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

 
முகம் சுழிக்கும் முன்னே முத்தொன்றுப் பெற்றுக் கொடுத்தாள் எங்கள் கையில். புதிய உயிர் ஒன்றின் வரவால் புத்துயிர் பெற்றது எங்கள் வாழ்க்கை. எல்லாம் இன்பமயம். யாருக்குமே எந்தக் குறையுமில்லை மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை  அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு????  வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.  அவள் முகத்தில் சிரிப்பு  இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.


சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டார்.

சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் என்றாள். 

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா என்றார்.

ப் பூ .... இவ்வளவுதானா? என்றாள்.

நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு என்றார்.

பத்தியம் ஏதேனும் உண்டா? என்றாள்

சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
 “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா என்றாள்.
இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? என்றேன்.
அதற்கு போட்டோக்களும் தருகிறேன் மாமா என்றாள்.

எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள் என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

இணைப்பு
பலருக்கும் பயன்பட இணைய தளத்தில் இதனை இணைக்க பாடுபட்ட அண்ணன் திரு வின்சென்ட் மற்றும் அண்ணன். திரு ஓசை செல்லா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகள்.
மது. இராமகிருஷ்ணன். ஹேமா உமாசங்கர்.

மக்கள் பயனுற வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் வாழ்வில் நடந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டு நமது பாட்டி வைத்தியம் எளிமையானது, சிறப்பானது, அதிக செலவில்லாதது மற்றும் பின்விளைவு இல்லாதது  என்ற நம்பிக்கையை விதைத்த அண்ணன் திரு. மது. இராமகிருஷ்ணன், திருமதி. ஹேமா உமாசங்கர் இருவரின் குடும்பங்களுக்கும் உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். வைத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

20 comments:

கண்ணகி said...

எளிமையான அருமையான வைத்தியம்...ஆச்சர்யமாக இருக்கிறது...மற்றவர்களுக்கும் இது பயன்படவேண்டும் என்று நினைத்த உமாவிற்கு வாழ்த்துக்கள்..

வின்சென்ட். said...

திருமதி.கண்ணகி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.நமது வைத்தியம் எளிமையானது நம்பகமானது பின்விளைவு இல்லாதது மேலும் செலவில்லாதது.

சேக்காளி said...

நாலு பேர் நன்றாக இருக்கட்டும் என்று எண்ணும் ஹேமாக்கா விரைவில் பூரண குணமடைந்து பல்லாண்டு வாழட்டும்.அடுத்த வருடம் இதே நாளில் வெண்புள்ளிகள் முழுமையாய் நீங்கிய ஹேமாக்காவின் புகைப்படத்தினை காண ஆவலாக இருக்கிறேன்.

வின்சென்ட். said...

திரு. சேக்காளி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. உங்கள் ஆவல் பூர்த்தியாக இறைவன் அருள் புரிவாராக.

மாதேவி said...

உமாவின் நல்மனம்போல் அவர்களுக்கு பூரண நலன் கிடைக்கும்.

T.Sivaraman said...

Dear Sir, Very nice article for the benefit of general public. May you and your blog live long.

There are so many more home remedies (Patti vaithiyam) and our future generations will be benefited the most if there are records.

Karuveppelai and kilanellai can grow easily in home garden and people can take advantage of that too.

வின்சென்ட். said...

திருமதி.மாதேவி

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

வின்சென்ட். said...

Sri. T.Sivaraman

Thank you very much for your visit and comments.

ச‌ஹ்ரித‌ய‌ன் said...

நன்றி திரு வின்சென்ட்; சில நூறு பேர்களிடம் பகிர்ந்து உள்ளேன்
சர்க்கரை எந்தவிதத்தில் முக்கிய காரணி என்றும் விளக்க முடிந்தால் நலம்; சுத்திகரிப்பில் ரசாயனம் ஒரு தீமை மற்றும் கலோரி விஷயங்கள் தவிர்த்து; அந்த வைத்தியர் இது போல் சில பிற பொதுவான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால் நன்றி !

jaicbe said...

As always, you are great sir, great article, will spread this message as much as possible, keep up your good work.

Jai

வின்சென்ட். said...

திரு.ச‌ஹ்ரித‌ய‌ன்

உங்கள் வருகைக்கு நன்றி. வைத்தியரை அணுக முடியாத காரணத்தால் அவரது விளக்கம் பெற இயலவில்லை. பொதுவாக நமது வைத்திய முறையில் உப்பு, புளி, காரம் இவைகள் எதிர் வினை புரியும் என்று தவிர்க்கச் சொல்லுவார்கள். அந்த வரிசையில் இந்த வெள்ளை சர்க்கரையும் சேர்ந்துவிடுகிறது.

வின்சென்ட். said...

Sri. Jai

Thank you very for spreading the message.

life after retirement said...

hats off to Uma for boldly portraying her photo to spread the message of cure for leucoderma.
congrats to vincent and Madhu ramakrishnasn for taking up the issue. carry on

வின்சென்ட். said...

டாக்டர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

JS said...

Thank you so much to share it to all of us.

வின்சென்ட். said...

Thank you for your Visit to my Blog.

DAN said...

Thanks for the excellent information.

வின்சென்ட். said...

Thank you.

வின்சென்ட். said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி ஐயா