"The President in Washington sends word that he wishes to buy
our land. But how can you buy or sell the sky? the land? The idea is strange to
us. If we do not own the freshness of the air and the sparkle of
the water, how can you buy them?
சியாட்டில் தலைவரின் 1855 ஆண்டு எழுதிய கடிதத்தின் முதல்
வரிகள். நிலத்தை வாங்க விரும்புவதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதிக்கு
எவ்வாறு ஆகாயத்தையும் , நிலத்தையும் வாங்க, விற்க முடியும் ??? என்று ஆரம்பிக்கும்
கடிதம் இன்றைய உணவு பிரச்னைகளின் துவக்கம் என்று கூறலாம். நன்கு படித்த
ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் கடல் கடந்து மற்ற கண்டங்களில் குடியேறி
அவர்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்தனர். விஞ்ஞானம் வளர வளர மோட்டார் வாகனம்
கண்டுபிடிக்கப்பட்டு அதனை செம்மைபடுத்த தென் அமெரிக்காவில் மழைக்காடுகள்
அழிக்கப்பட்டு இரப்பர் தோட்டங்கள்
தோன்றின. பின்னர் எரிபொருளுக்காக ஒவ்வொரு நாட்டின் இயற்கை வாழ்வாதாரங்களை பாழ்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் கச்சா எண்ணெய்
விற்று சொகுசு வாழ்கை வாழ்கின்றனர். தங்களின் பலத்தைக் காட்ட இன்றுவரை சண்டைகள்
ஆனால் கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக் குறைக்கு முக்கியமானவையே.
மக்கள் தொகைப் பெருக்கம் 1960இல் 3 பில்லியன் 2011இல் 7 பில்லியன்.
சராசரி வயது 1960இல் 53 வயது 2010இல் 69 வயது.
தொழிற்சாலைகள், வீட்டுமனைகள் வளர்ச்சியால்
சுருங்கி வரும் விளைநிலம்.
கேளவிக் குறியாகும் வனப்பரப்பு |
காடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில் நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல்
பாதிப்பு.
2006-2008 தேவையற்ற விலையேற்றம். |
கச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது. இந்த
விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.
சொகுசு வாழ்கையில் மோட்டார் வாகன உற்பத்தி, தொழில் புரட்சியால் நிலம், நீர் மாசுபாடு இதனால் சுற்றுச்சுழல்
மாசடைந்து பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை.
கச்சா எண்ணையால் சுற்றுச் சுழல் பாதிப்பு. |
உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் ஏகாதிபத்தியத்திடம் உள்ளதால் தேவையான அளவு உணவு உற்பத்தி இருந்தும் பட்டினியாக
மக்கள். (உ.த.) உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்கச்
சொல்லியும் நமது பிரதமர் திரு மன்மோகன் சிங் தரமறுத்ததை நாம் அறிவோம்.
ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை/விற்பனை செய்யப்பட்டு பயோ-டீசல்
உற்பத்தி. தென் அமெரிக்காவில் உணவு பண்டங்களிலிருந்து எத்தினால் உற்பத்தி.
முக்கியமான விதை, உரம், பூச்சிகொல்லி போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு
கம்பெனிகளிடம்.
உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.
வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து அவர்களைக் காப்பாற்றி
கொண்டு வளரும் நாடுகளை மானியம் தர கூடாது
என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில்
விற்று உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது. (உ.த) ஹெய்தி HAITI நாட்டின் நெல் விவசாயம்
அமெரிக்க அரிசி இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது. இன்று
அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.
விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி யூக வணிகம், பங்குசந்தைளில்
செயற்கையாக விலையேற்றி கொள்ளையடிக்கும் ஸ்திரமற்ற
பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.
உலகமயம், தாராளமயம் விவசாயத்தை வெகுவாக பாதித்துள்ளது.
இவற்றையெல்லாம் பற்றி நன்கு அறிந்தும் நம்மை ஆளும் அரசியல் கட்சிகள் நம்மை
ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி காப்பது அவர்களின் கடமை. காரணம்
மேலே கூறிய அனைத்தும் தனிமனிதனால் சாதிக்க முடியாது. ஆனால் கூட்டுறவால் முடியும். கூட்டுறவே நாட்டுயர்வு.
2 comments:
Dear Sir, Thanks for the post. We were all bought up by our elders saying not to waste food. But when so many persons go hungry in developing countries and underdeveloped countries have a look at the link. Let us all ensure we do not waste food, instead help those in need.
http://www.rediff.com/business/slide-show/slide-show-1-heres-how-much-these-17-nations-generate-waste/20111020.htm
Dear Sir
Thank you very much for your visit and giving me a valuable link.The link is really worth.I will use the contents in my blog.
Post a Comment