Sunday, October 23, 2011

உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள்.


உலக உணவு தின கட்டுரைக்கு மறுமொழியில் திரு.T.சிவராமன் அவர்கள்  ஒரு தொடுப்பு தந்திருந்தார். உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள் பற்றி எழுதியிருந்தார்கள். காலனி ஆதிக்க நாடுகள் அதிகமாக இருந்தாலும் ஆசியா கண்டத்தில் ஜப்பான் மட்டுமே இருந்தது சற்று வியப்பை அளித்தது. இருப்பினம் அது 17 வது நாடாக இருந்தது. ஒருபுறம் வீணாகும் உணவு பொருட்கள் மறுபுறம் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் இறக்கும் அவலம். நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்கு உலகம். தவறை திருத்திக் கொள்ளுமா? இல்லை தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதனை அந்தந்த நாட்டின் மக்கள் தொகையோடு  ஒப்பிட்டு பார்க்கையில் மனம் கனத்தது உண்மை. பல மைல்கள் சென்று குடிநீர் எடுத்துவரும் ஆப்பிரிக்க பெண்மணிகள். வீணாக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களின் மறைந்திருக்கும் நீர்” (Virtual Water) பற்றியும் கணக்கிட்டால் நெஞ்சம் பதறுகிறது. இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறது ஆனால் நாம் அதனை துஷ்பிரயோகம் செய்து நமது வருங்கால குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறோம்.

2 comments:

settaikkaran said...

உலகெங்கும் நிலவுகிற பொருளாதார மந்தநிலைக்கு இந்தியாவையும் சீனாவையும் குற்றம் கூறுகிற சில மேற்கத்திய நாடுகள் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். நல்ல பகிர்வு!

வின்சென்ட். said...

திரு. சேட்டைக்காரன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. பொதுவாக இன்றைய மேற்கத்திய பொருளாதாரம் மற்ற நாடுகளின் கச்சா எண்ணையில் நடப்பது குறிப்பாக எண்ணைக்கான படுகொலைகள் தொடர்வது ஆரோக்கியமான செயலாக தோன்றவில்லை.