Saturday, March 5, 2011

வீடுகளில் போன்சாய் வளர்ப்பு - - ஒருநாள் பயிற்சி.


இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால்  சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

போன்சாய்  புகைப்படங்களைக் காண கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.
போன்சாய் மரங்களின் புகைப்படங்கள்

3 comments:

வால்பையன் said...

மூன்று வருடத்திற்கு முன் உங்களை கோவையில் சந்தித்தேன், இப்பொழுது கோவைவாசியாகவே ஆகிவிட்டேன், எனக்கு போன்சாய் வளர்க்க வேண்டும் என்று வெகுநாள் ஆசை!, தமிழில் அது பற்றி எழுதியிருந்தால் லிங்க் கொடுக்கவும் ப்ளீஸ்!

Pandian R said...

நீங்கள் எழுதும் அனைத்தும் ஆர்வம் ஊட்டுவதுடன் வியாபார ரீதியாக வெற்றி பெரும் நுட்பமாகவும் உள்ளது,

நன்றி,

பாண்டியன்
புதுக்கோட்டை

வின்சென்ட். said...

திரு. வால்பையன்

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கோவை வந்தது மகழ்ச்சி.போன்சாய் பற்றி எழுதவில்லை. உங்களுக்கு தேவையான தகவல்களை தருகிறேன்.

திரு.பாண்டியன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. வியாபார ரீதியாக போன்சாய் மரங்கள் சில நூறு ரூபாயிலிருந்து லட்சங்கள் வரை பார்த்திருக்கிறேன்.