Saturday, January 24, 2009

மாண்பு மிகு மண்புழுக்கள்.

இறைவன் கொடுத்த உதவியாளர்களில் மண்புழு மிக சிறந்த உதவியாளர். மண்ணை உழுவதிலிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்து நல்ல உரமாக மாற்றி விவசாயிகளின் நண்பன் என்று பெயரெடுத்த இவரை இரசாயன உரம், பூச்சி மற்றும் களை மருந்துகளால் மண்ணை விட்டே விரட்டிவிட்டோம். விவசாயம் மூச்சு திணறிய போது திடீர் ஞானோதயம் உடனே அதற்கென கட்டிடம் கட்டி வளர்த்தால் உரம் கிடைக்கும் அதுதான் நல்லது என ஒருவர், இல்லை விவசாய நிலத்திலேயே வளர்த்தால் நல்லது என மற்றொருவர். ஆப்ரிக்க இனம் தான் சிறந்தது என ஒருவர், இல்லை பெரும்தீனீ தின்னும் அது ஒரு --- என மற்றொருவர். நிறைய இடங்களில் இந்த சர்சையை காணும் எனக்கு வியப்பாக இருக்கும். இறைவன் படைத்த எல்லாமே ஏதோ ஒரு நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் நமக்கு சாதகமானதை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவைகளை அழிக்கிறோம் முடியாவிட்டால் தூற்றுகிறோம். ஒவ்வொரு தொழிலுக்கும் வல்லுனர்களை (Specialist) தேடும் நாம் மண்புழுக்களுக்கு மட்டும் சர்சையிடுகிறோம். இதனால் விவசாயிகள் குழப்பம் அடைகின்றனர் என்பதே உண்மை. விவசாயநிலங்களில் நாட்டுபுழுக்களையும், விவசாய கழிவுகளை விரைவாக மறுசுழற்சி செய்யவும், நகரகழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஆப்ரிக்க இன மண் புழுக்களையும் உபயோகிப்பதில் தவறில்லை என எண்ணுகிறேன். இல்லையேல் அதுவே (குப்பைகள்) சுற்றுசுழலுக்கு மாசுபாடுள்ளதாக மாறிவிடக்கூடாது. சென்ற வருடம் எர்ணாகுளம் நகரில் அரசு விடுமுறை அறிவித்து நகர குப்பைகளை அகற்றியதை மறந்துவிடாதீர்கள். மக்கள் தொகை பெருக்கத்தில் குப்பைகள் மலையளவு விரைவில் சேர்ந்துவிடுகிறது. தீர்வு??? மாண்பு மிகு மண்புழுக்கள்தான். கோவையில் நகர கழிவுகளை மண்புழுக்கள் கொண்டு வியாபார ரீதியில் மண்புழு உரம் தயாரிக்கிறார்கள். சுமார் 1 அடிக்கு மேலுள்ள மண்புழுக்கள்.

10 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படத்தைப்பார்த்ததும் அறிவியல் பாடத்தில் படம் வரைந்து பாகம் குறித்தது நினைவுக்கு வருகிறது... :)

வின்சென்ட். said...

திருமதி. முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி.சில பள்ளி குழந்தைகளும் எனது பதிவுகளை படிக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் உபயோகமாக அந்த படத்தை பதிவேற்றினேன்.

தமிழ் said...

அருமையான தகவல்கள்

வின்சென்ட். said...

திரு.திகழ்மிளிர்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

life after retirement said...

Sir,longest earth worm I have seen. do they have any particular habitat or they can be propagated in new habitat with different soil composotion.
dr.raju

வின்சென்ட். said...

டாக்டர் அவர்களுக்கு

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. எங்கள் இடம் ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்திருக்கிறது. எனவே இந்த நீண்ட மண்புழுக்கள் அந்த பகுதியில் இருந்திருக்க வேண்டும். இருமாதங்களுக்கு முன் எனது நண்பர் குழியொன்று தோண்டினார் அப்போது சுமார் 5 அடிக்குக் கீழ் இதேபோன்று நீண்ட புழுக்களை கண்டதாக கூறினார்.இன்னும் இதனை நான் வளர்க்க முயற்சிக்கவில்லை. ஆரம்பித்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்

கபீஷ் said...

Useful information!! Good job as usual

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

வின்சென்ட். said...

திரு. கபீஷ்

உங்கள் வருகைக்கு நன்றி.

வின்சென்ட். said...

திரு.நாமக்கல் சிபி

உங்கள் வருகைக்கு நன்றி.