Wednesday, January 14, 2009

தேனீ வளர்ப்பு நுட்பங்கள்- நூல்

மனிதன் தன் அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் மிக அதிக மகசூல் தரும் புதிய இரகங்களை கண்டுபிடித்தாலும் இயற்கையாக தேனீக்கள் செய்யும் மகசூல் அதிகரிப்பை தவிர்க்கக் கூடாது. தேனீ வளர்ப்பது என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் ஆகும். விவசாயத்திற்கு குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு சாலப் பொருந்தும். ஒன்று மகசூல் கூடுகிறது மற்றொன்று தேன், மெழுகு, அரசக்கூழ் (Royal Jelly) போன்றவற்றால் கூடுதல் வருமானம்.
1991-92 ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த தமிழகம் அவ்விடத்தை இழந்துவிட்டது. மீண்டும் அவ்விடத்தை அடைய முயற்சிக்க வேண்டும். தேனீ வளர்ப்பை துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் மெ. முத்துராமன் அவர்களின் “தேனீ வளர்ப்பு நுட்பங்கள்” என்ற நூல் மிக பயனுள்ளதாக இருக்கும். தெளிவான வண்ணபடங்களுடன் வளர்ப்பு, பராமரிப்பு நுட்பங்கள், உணவு ஊட்டுதல், நோய்கள் என அனைத்து தகவல்களையும் விரிவாக தந்திருப்பது நூலின் சிறப்பு. ரூ.100/= விலையுள்ள இந்நூல் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும்.

வேளாண் பூச்சியியல் துறை,
பயிர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
கோயமுத்தூர் - 641 003.

14 comments:

வடுவூர் குமார் said...

தகவலுக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு.வடுவூர் குமார்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

life after retirement said...

your message reg.bee keeping will motivate many agriculturist to take up bee keping.

dr.raju

வின்சென்ட். said...

டாக்டர் அவர்களுக்கு

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல் நிறைய விவசாய நண்பர்கள் தேனீ வளர்க்க முன் வரவேண்டும். நிறைய வசதிகளை அரசாங்கமும் அரசு சாரா நிறுவனங்களும் செய்து தருகிறார்கள். தேனீ வளர்க்க சாகுபடி உயரும், சாகுபடி உயர நாடு உயரும்.

KABEER ANBAN said...

சுமார் இருபது பெட்டிகளை சிறுமலை காபி தோட்டத்தில் தேனீ வளர்ப்பிற்காக வைத்து அதற்கென தனி நிபுணர்களையும் நியமித்து ஒருவருட காலம் முயற்சித்தோம்.ஓரளவு வளரும்.பின்னர் தேனீக்களே குறைந்து போகும்.
குறிப்பிடும் படியாக தேன் சேகரிப்பு எதுவும் இருக்கவில்லை. இத்தனைக்கும் கூர்க் பகுதி காபி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு பரவலாகக் காணப்படுகிறது.

தேனுக்காக செல்லும் தேனீக்கள் வழியிலேயே ஒரு வகை குழவியால் தின்னப்படுவதே காரணம் என்று கூறினர். இதற்கு மாற்று என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. நாகர் கோவில் அருகே ரப்பர் தோட்டங்களில் மட்டுமே ஓரளவு தேனீ வளர்ப்பு வெற்றி பெற்றுள்ளது. தேனீ வளர்ப்பில் ஈடுபடும் முன் இத்தகைய பிரச்சனைகள் குறித்தும் விசாரித்து அறிய வேண்டும்.

வின்சென்ட். said...

திரு.கபீர் அன்பன்

உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவதிற்கு என்னால் மிக சரியாக பதில் தர இயலாவிட்டாலும் ஓரளவு அனுமானிக்க இயலும். நீங்கள் கூறியது போல் குளவி தேனீக்களின் எதிரிதான். ஆனால் 1991-92 ஆண்டுகளில் “தாய்” சாக்குப் புழு வைரஸ் நோயால் தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் தேனீ கூட்டங்கள் அழிந்ததாக கூறுவார்கள். நீங்கள் கூறுவது இந்த காலகட்டமாக இருக்குமோ? தெரிவியுங்கள்.

KABEER ANBAN said...

நன்றி வின்சென்ட் ஐயா

நான் சொல்லிய காலகட்டம் 2000-2001. அந்த சமயத்தில் வைரஸ் பற்றி யாரும் குறிப்பிடவில்லை.

ஒருவேளை அதிக குளிர் பிரதேசமான கூர்க்-ல் இந்த குளவிகள் அதிகம் காணப்படுவதில்லையோ என்னவோ :)
அதனால் இந்த பிரச்சனை அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.

வின்சென்ட். said...

திரு.கபீர் அன்பன் அவர்களுக்கு

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கும். இரசாயன களை மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை எந்த அளவிற்கு உபயோகப்படுத்துகிறோம் என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.நண்பர்களுடன் கலந்தாலோசிக்கிறேன். பதில் தந்தமைக்கு மிக்க நன்றி.

kelly said...

Great information! I have been hearing more about this subject matter and thank you for bringing this information to our attention.

வின்சென்ட். said...

திரு.கெல்லி.

உங்கள் வருகைக்கு நன்றி.

Unknown said...

தினேஷ்
மதிப்பிற்குறிய அய்யா அறிவது நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்.இங்கே அடிமை போல 4வருடமாக வேலை செய்து இப்போது வேற வழியில்லாத நிலையில் ஒரு நண்பர் ஆலோசனை படி தேனீ வளர்க்க திட்டமிட்டுள்ளேன்..திட்டமிட்ட அந்த நாள் முதல் ஒவ்வோருவரிடமும் கேட்பதுண்டு ஆனாலும் யாருக்கும் இது பற்றி idea இல்லை இது எனக்கு கூட ஒரு பின்னடைவுதான் ஆகவே இது பற்றி சரியான தகவல் சொல்லவும்....

வின்சென்ட். said...

திரு.தினேஷ்

உங்களுக்கு எந்த விதமான தகவல் வேண்டும்? பொதுவாக மலர்கள் உள்ள பகுதி ஏற்றது. காபி, ரப்பர் எஸ்டேட், தென்னந்தோப்பு பகுதிகள் ஏற்றது.சுத்தமான தேனுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உண்டு.

sundar said...

வின்சென்ட்.சார்
எனக்கு மருத்துவ செடிகள் எங்கு கிடைக்கும் என்று
தயவு செய்து சொல்லுங்கள்
sundar.subramany@yahoo.in

வின்சென்ட். said...

திரு. சுந்தர்
உங்கள் வருகைக்கு நன்றி. எந்த மாதிரியான மருத்துவ செடிகள், எவ்வளவு என்பதனை தெரிவியுங்கள்.