வண்ணங்களிலும், வடிவத்திலும்,அழகிலும் ஆர்கிட் மலர்களுக்கு நிகர் ஆர்கிட் மலர்கள் தான் (புகைபடங்களை பார்த்த பின் சரி என சொல்வீர்கள்? ). நீண்ட நாட்கள் வாடாமல் இருப்பதால் கொய்மலர் (Cut Flower) வணிகத்தில் இன்று சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாக தென்கிழக்கு ஆசியநாடுகளில் வகை வகையான ஆர்கிட் மலர்களை காணலாம். குறிப்பாக தாய்லாந்து நாடு மலர்கள் சிறப்பானவை. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் இம்மலர்களுக்கு பெயர் பெற்றவை. இருநாட்களுக்கு முன் கோட்டயம் தோட்டக்கலை கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே தாய்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தார்கள். விலையும் எட்டாத உயரத்திலிருந்தது. காட்சிக்கு சில.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கொள்ளை அழகு. பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அமெரிக்காவில் எவ்வளவோ வண்ணப்பூக்களைப் பார்த்த போதிலும், ப்ளாரிடாவில் , டிஸ்னி லேடண்டில், சுற்றி வரும் போது, மல்லிகைப்பூ வாசனை வந்தவுடன் , வரிசையாக மல்லிகைப் புதர்கள் அளித்த மகிழ்ச்சி !!! ம்ம்ம் ,
திருமதி.வெற்றிமகள்
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.எவ்வளவுதான் மனத்திற்கு கஷ்டமாக இருந்தாலும் மலர்களை பார்த்தால் நம்மையும் மறந்துவிடுவது இயற்கையே.சுமார் 60 படங்களை எடுத்தேன்.தவணை முறையில் மக்கள் விருப்பப்பட்டால் பதிவிடுகிறேன்.
திரு வின்சண்ட் அவர்களே ஆர்கிட மலர்கள் அறிமையாக உள்ளன். ஆனால் விலையைப்பார்த்தால் தலை சுற்றும். வண்ண மலர்கள் மிக நன்றே. கண்ணுக்கு இனிமை. நன்றி.
திரு. குப்புசாமி அவர்களுக்கு
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.விலையை நினைத்தால் தலை சுற்றுகிறது என்னவோ உண்மை.
பசுமையான காய்கறிகள்,பழங்கள் மற்றும் வண்ண வண்ண மலர்கள் எப்போதுமே கண்களுக்கு விருந்துதான். வண்ண மலர்களால் நல்ல விருந்து படைத்துவிட்டீர்கள். இரண்டாவது படம் அழகு.
திருமதி.நானானி
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Post a Comment