Tuesday, November 20, 2007

அமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.

2005 ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய காத்ரீனா மற்றும் ரீட்டா புயல் காற்றுகள் சுமார் 32 கோடி மரங்களை மிசிசிப்பி, அலபாமா பகுதிகளில் அழித்துள்ளது என கணக்கிட்டுள்ளனர். அதேபோன்று சென்றமாதம் ஏற்பட்ட கலிபோர்னிய மாநில 'தீ''யும் சுமார் 5லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை நாசப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.The devastation of southern Gulf Coast forests by Hurricane Katrina was documented in before-and-after images from the Landsat 5 satellite. The Interstate 10 "twin-span" bridges that cross Lake Pontchartrain east of New Orleans is seen here pre- and post-Katrina. Bayou Sauvage National Wildlife Refuge is the large patch of forest (green) the lower left portion of the LEFT image, which suffered heavy tree mortality (seen in red in the RIGHT image after the storm). (Credit: USGS)


இது ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாக கருதாமல் உலகிற்கு ஏற்பட்ட (சுற்றுச்சுழல்) இழப்பாக எடுத்துக் கொண்டால் அதனை ஈடுசெய்ய உலகிற்கு பல பத்தாண்டுகள் தேவை. ஏற்கனவே உலகில் கரிமிலவாயு வெளிவிடுவதில் 25% அமெரிக்காவின் பங்கு என்கின்றனர். "கியுட்டோ" ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமலும் இருப்பதால் அதற்கு மேலும் சுற்றுச்சுழல் பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

32 கோடி மரங்களின் உணவு தயாரிப்பு இல்லை என்பதால் அவைகள் வெளியிடும் ஆக்ஸிஷன் உலகிற்கு அடுத்த 10 -20 ஆண்டுகளுக்கு கிடைக்கப் போவதில்லை மாறாக அவை மக்கப்போவதால் சுமார் 36.7 கோடி டன்கள் கரிமிலவாயுவை வெளிவிடுமென கணக்கிட்டுள்ளனர். 5லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் நாசப்படும் போது அது வெளியிடும் கரிமில வாயுவையும் கணக்கிட்டால் உலகமே சுற்றுச்சுழலை பாதுகாப்பதில் மிக அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்திலுள்ளது.


வெப்பமண்டல காடுகளை உலகின் குளிரூட்டி (A/C) என்பார்கள். இந்த நிலையில் வெப்ப மண்டல நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு எல்லா வகைகளிலும் நன்மை ஏற்படபோகின்றது. நாம் சற்று மரவளர்ப்பில கவனம் செலுத்தினால் நீராதாரத்தை பெருக்குவதோடு உணவு உற்பத்தியிலும் சிறந்து விளங்க முடியும். அதற்கு மேலும் உபரியாக கரிம வர்த்தகத்தில் (Carbon Trading) பணம் ஈட்டமுடியும். வருங்காலத்தில் கரிம வர்த்தகம் வெப்ப மண்டல வளரும் நாடுகளுக்கு சிறந்த மாறுதல்களை தரவுள்ளது. தேவை முனைப்புடன் கூடிய மரவளர்ப்பு. தமிழகத்திலுள்ள குறு, சிறு விவசாய்கள் தமிழக வனத்துறையை அணுகினால் ஊக்கத் தொகையுடன் "வனங்களுக்கு வெளியே மரவளர்ப்பு" என்ற திட்டத்தில் உதவ காத்திருக்கிறார்கள் அணுகிப் பயன் பெறுங்கள். வலைப்பதிவர்கள் இச்செய்தியை குறு, சிறு விவசாய்களிடம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

Source: abc News. Photo:Science Daily

7 comments:

வெங்கட்ராமன் said...

நல்ல செய்தி வின்சென்ட்.

இது போன்ற உபயோகமான செய்திகள் தருவதற்கு நன்றி.

வின்சென்ட். said...

தங்களின் வருகைக்கு நன்றி திரு.வெங்கட்ராமன்.

சீனு said...

//இது ஒரு நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பாக கருதாமல் உலகிற்கு ஏற்பட்ட (சுற்றுச்சுழல்) இழப்பாக எடுத்துக் கொண்டால் அதனை ஈடுசெய்ய உலகிற்கு பல பத்தாண்டுகள் தேவை.//

(வடிவேலு ஸ்டைலில்) 'திருத்தம்'.

உலகிற்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பாக தான் எடுத்துக் கொள்ளவேண்டும். காரணம், மூன்றாம் உலக நாடுகளை விட வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தும் pollution தான் உலகை அச்சுருத்துகின்றது. வெறும் 5 கோடி மக்கள் தொகை கொண்ட ஆஸ்திரேலியாவின் ஓஸோன் மண்டலம் தான் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. ஆக, வளர்ந்த நாடுகள் தாம் இந்த புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.

வின்சென்ட். said...

திரு.சீனு உங்கள் வருகைக்கு நன்றி.எனது அடுத்த வரிகள் "உலகில் கரிமிலவாயு வெளிவிடுவதில் 25% அமெரிக்காவின் பங்கு என்கின்றனர். "கியுட்டோ" ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமலும் இருப்பதால்" என்றும்
"உணவா ? எரிபொருளா? " என்ற பதிவில் வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்க,தென் அமெரிக்க காடுகளை
அழித்தது பற்றியும் கூறியிருக்கிறேன். உண்மை என்னவென்றால் காரணம் வளர்ந்த நாடுகளாயிருப்பினும் அதனால் வரும் பாதிப்பை அனுபவிப்பது உலக நாடுகள் அணைத்துமே குறிப்பாக ஏழை மற்றும் வளரும் நாடுகள்.எனவே பொருள் இழப்பு அமெரிக்காவிற்குத்தான். ஆனால சுற்றுச்சுழல் இழப்பு அணைவருக்கும்தான்.

ரசிகன் said...

ரொம்ப சரியான செய்தி.நன்றீங்க..

வின்சென்ட். said...

திரு.ரசிகன்
தங்களின் வருகைக்கு நன்றி.

malik said...

DEARS, I AM AJ.MALIK.I AM VERY PROUD OF YOUR MESSAGE. WE NEED TO SUPPORT ENVOIREMENT PROTECTORS, BECAUSE WE ALSO PASS TO GOOD LIFE TO OUR CHILDREN AND OUR NATION. ONCE AGAIN THANNK YOU SO MUCH