Saturday, July 21, 2007

இழப்பும், அருமையும்.

எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை ஒரு பொருள் நம்மை அடையும் வரை உணர்வதில்லை
- அதே போன்று
ஒரு பொருளை இழக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை.


60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் இஸ்ரேல் நாடு ''சொட்டுநீர் ''பாசனத்தை உலகிற்கு
அறிமுகப்படுத்தியது. இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை தரும்புரி மாவட்ட துல்லிய வேளாண்மை (PRECISION FARMING) செய்யும்
உழவர்களை கேட்டால் விரிவாக கூறுவார்கள். நல்ல விளைச்சல் அதேசமயம் கூட்டுறவு முறையில் உற்பத்தி மற்றும் சந்தை. எனவே கேரளா, கர்னாடகா மாநில சந்தைகள் இன்று இவர்களை நோக்கி வருகிறது. ஒரு காலத்தில் வறண்ட மாவட்டமாக இருந்தது இன்று மற்ற மாவட்டங்களுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது.


அதே 60 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ''பசுமை புரட்சி '' அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வீச்சு இந்த 40 ஆண்டுகளில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளும், கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருவதும் உறுதி செய்யும். அதே போன்று நம் நண்பர்களான மரங்கள்,கால்நடைகள், மண்புழு, பறவைகள், தேனீ, நன்மை தரும்நுண்ணுயிர்கள், அரியமருத்துவ தாவரங்கள் ஆகியவற்றின் அருமைகளை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை பெருகிவரும் மருந்துக்கடைகளும், மருத்துவமனைகளும் உறுதி செய்யும்.

நடந்தவைகளை பாடமாகக் கொண்டு நண்பர்களை இணைத்து துல்லிய இயற்கை வேளாண்மை
செய்வோம்.

6 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..நன்றாக எழுதுகிறீர்கள்.


(பதிவுக்கு சம்மப்ந்தம் இல்லாத கேள்வி)
நான் ஊருக்குப்போகும் போட்து செடிக்கு தண்ணீர் விட ஒரு முயற்சி செய்தேன்..பைப் ஒன்றில் துளைகள் நிறைய இருக்கிற மாதிரி அது எல்லா த் தொட்டிக்கும் சொட்டி சொட்டி தண்ணீர் விடுமாறு ஆனால் அடித்த காற்றில் கட்டி வைத்திருந்ததெல்லாம் நகர்ந்து சரியாக விழாமால் சில செடிகள் இறந்துவிட்டன..அது போன்ற வீட்டுச்செடிகளுக்கு எதும் ஏற்பாடு செய்யமுடியுமா ...ரெடிமேடாக ஒரு சிஸ்டம் .

வின்சென்ட். said...

நன்றி.

கண்டிப்பாக செய்யமுடியும். சுத்திகரிக்கப்பட்ட தென்னை நார் கழிவு + மண்புழு உரம் அதிகமாக தொட்டியில் இட சுமார் 4 நாட்கள் வரை கவலை இல்லை. இவற்றுடன் Gel சேர்க்க சுமார் 7-10 நாட்கள் வரை கவலை இல்லை. இது சீசனையும் இடத்தையும் பொறுத்து மாறும்.

Anonymous said...

துல்லிய வேளாண்மை தர்ம்புரியில் ரசாயன உரங்கள் பயன் படுத்தியுள்ளனர் அதையே மண்புழு உரம்... பஞ்சகாவியா போன்று உபயோகித்தால் ஆரோக்கியத்திற்கு நன்று, விலையும் அதிகம்கிடைக்கும். நன்கு உள்ளது,முயற்சி தொடருட்டும்.

வின்சென்ட். said...

நன்றி.நீங்கள் கூறுவது உண்மை.முயற்சியை நாம் தான் மேற்கொள்ளவேண்டும்.

வவ்வால் said...

நல்லப்பதிவு, ஆனால் தர்மபுரி மாவட்டம் முழுவதுமே பசுமை ஆனது போல சொல்லியுள்ளீர்கள் நான் 4 அ 5 வருடம் முன்னர் வந்த போது வானம் பார்த்து கிடந்ததே மாவட்டம் அதற்குள் மாறி விட்டதா!

//அது போன்ற வீட்டுச்செடிகளுக்கு எதும் ஏற்பாடு செய்யமுடியுமா ...ரெடிமேடாக ஒரு சிஸ்டம் .//

ஏதேனும் பாட்டில் அல்லது சிறிய பானையில் ஓட்டை இட்டு அது மண்ணில் புதைந்து இருக்குமாறு வைத்து தண்ணீர் ஊற்றினால் மெதுவாக இறங்கும். மரங்களுக்கே அப்படி ஓட்டை விழுந்த பானைகள் வைத்து தண்ணீர் விட்டு நீர் சேமிக்கிறார்கள்.மேலும் ஆவியாதலை தடுக்க மல்ச்சிங் செய்தால் குறைந்த நீரில் நீண்ட நாட்களுக்கு வாழும்.pruning leaves and twigs also reduces water requirement

வின்சென்ட். said...

நன்றி. நான் தரும்புரி மாவட்ட துல்லிய வேளாண்மை செய்யும் உழவர்களை நோக்கி மற்ற மாநில உழவர்களும், உயர் அதிகாரிகளும் வருகிறார்கள் என்று கூற வருகிறேன், முழு மாவட்டம் அல்ல.) இது 2004-05 முதல் துவங்கப்பட்டுள்ளதால் பயன் கருதி விரைவில் நீங்கள் நிணைத்தது போல் மாவட்டம் முழுவதுமே பசுமை ஆகும்.

சுத்திகரிக்கப்பட்ட தென்னை நார் கழிவு + மண்புழு உரம் அதிகமாக தொட்டியில் இட சுமார் 4 நாட்கள் வரை கவலை இல்லை. இவற்றுடன் Gel சேர்க்க சுமார் 7-10 நாட்கள் வரை கவலை இல்லை. இது சீசனையும் இடத்தையும் பொறுத்து மாறும். அல்லது சிறிய சொட்டு நீர் அமைப்பு கொடுக்கலாம்.தேவையிருப்பின் புகைப்படத்துடன் பதிவு இடுகிறேன்.