Sunday, August 25, 2013

இன்று உலக வீட்டுத் தோட்ட தினம். 25-08-2013



பெருகி வரும் ஜனதொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைக் கேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நாம்மாலான  ஒரு மிக சிறிய வாய்ப்பு இந்த வீட்டுத் தோட்டம்

உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் வீட்டுத் தோட்டம் என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.

எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:

http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களால் தான் தெரியும்... நன்றிகள் பல....

கோமதி அரசு said...

நன்றாக சொன்னீர்கள். நானும் ஒருவாரம் முன் வீட்டு தோட்டம்ப் பற்றி பதிவு போட்டு இருந்தேன்.
மனதுக்கும், மகிழ்ச்சி, இனிமை அளிப்பது வீட்டு தோட்டம்.
உலக தோட்டத்தினத்திற்கு வாழ்த்துக்கள்.
இயற்கையை அழிக்காமல் மரம், செடி, கொடிகளை வளர்த்து மழை பெற்று மனிதன் வாழ்வது நன்று.
எங்கும் அடுக்கு மாடி குடி இருப்புகள் கட்ட விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடை செய்தால் தான் நாடு நலம் பெறும்.

கோமதி அரசு said...

உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.//

உண்மை, நான் தொட்டிகளில் பயனுள்ள மூலிகைகள், பூச்செடிகள் வளர்க்கிறேன்.

சமுதாயத்திற்கு பயனளிக்கும் நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.

கோவை நேரம் said...

தகவலுக்கு நன்றி...வீட்டுத்தோட்டம் போடலாம்..நமக்குண்டான தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

கோவை நேரம் said...

சார் வணக்கம் .ஒருமுறை உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்தது.அதற்கப்புறம் இல்லை.உங்களின் மொபைல் எண் கிடைக்குமா...சந்திக்க விரும்புகிறேன்..
ஜீவா 9894401474

வின்சென்ட். said...

உங்கள் மூவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.