Monday, September 2, 2013

ஹூஜல்கல்சர் (Hugelkulture)



வேண்டாத பொருட்களின் மறுஉபயோகம், குப்பை என்று எண்ணும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் சக்தி வீட்டுத் தோட்டதிற்கு உண்டு. சில முறைகள் நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் வழக்கத்தில் உண்டு. அவைகளில் ஒன்று ஹூஜல்குல்சர்
வேண்டாத அட்டைகள்

மரக்குச்சிகள்

மண்புழு உரம் கலந்த தென்னைநார் கழிவு

புதினா நாற்றுக்கள்.

நன்கு வளர்நதுள்ள புதினா

ஆரோக்கியமான இலைகள்
 “ஹூஜல்குல்சர் (hugelkulture) என்ற வாயில் நுழையாத இந்த ஜெர்மன் வார்த்தைக்கு உயரமான மேட்டுப்பாத்தி என்று பொருள் கொள்ளலாம். சிறு வித்தியாசம் பாத்தியின் அடியில் பெரிய மரத்துண்டுகளை அடுக்கி அதற்கு மேல் மண் இட்டு செடிகளை நடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல மரதுண்டுகள் மக்கி உரமாக மாறும் அதே சமயம் மரதுண்டுகள் நீரையும் தன்னகத்தே உறிஞ்சிக் கொள்வதால் மேலேயுள்ள தாவரங்களுக்கு உரமும் நீரும் அடிக்கடி தரவேண்டிய அவசியம் குறைவு. வேர்களுக்கு தேவையான காற்றும், எளிதில் செல்ல மக்கிய மரத்துண்டுகளும் இருப்பதால் வேர்கள் நன்கு பரவி செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த முறை கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜெர்மனியிலும் நூற்றாண்டுகளுக்கும் மேலாக  வழக்கத்தில் உள்ளது.  எளிமையானதும் செலவு குறைந்த ஒரு முறையாகும். வேண்டாத அட்டைப் பெட்டிகள், மரத்துண்டுகள், காய்ந்த இலைக் குப்பைகள், என அனைத்தையும் உபயோகித்து சிறப்பான ஹூஜல்கல்சர் முறையை வீட்டுத் தோட்டத்தில் மிக எளிதாக கடைபிடிக்கலாம். பெரிய அளவில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சிறிய தொட்டிகளில் கூட செய்யலாம்.

5 comments:

கோமதி அரசு said...

அருமையான உரம் பற்றி சொன்னீர்கள்.
தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு வீடுகள், தெருவில் உள்ள செடி, மரங்களுக்கு நடுவில் இந்த மரத்தூள் போட்டு இருப்பதை பார்க்கிறேன்.
நானும் என் வீட்டு தோட்டத்திற்கு ஊருக்கு போய் செய்வேன்.

நன்றி.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அங்கு எடுத்த புகைபடங்களை பதிவாக போட்டீர்கள் என்றால் மக்கள் பின்பற்றுவாரகள். பொதுவாக மரக்குச்சிகள் தீக்கரையாகின்றன.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஹூஜல்கல்சர் பற்றி அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி! சூழல்மண்டலம் காத்தல், இயற்கைப் பொருட்கள் என்று ஈடுபாடு கொண்ட எனக்கு வலைச்சரம் மூலம் உங்கள் தளம் வந்தது மகிழ்ச்சி!

சதுக்க பூதம் said...

எனக்கு தெரிந்து அமெரிக்காவில் மரகிளை, தழைகளை வெட்டும் போது அதை ஷிரட் பண்ணி உரமாக்கி மீண்டும் உபயோக படுத்துகிறார்கள். கிளை தழைகளை வெட்டும் வண்டியிலேயே ஷிரட்டிங் மெஷினும் இருக்கும். அவ்வாறு ஷிரட் செய்வதால் டிரான்ஸ்போர்ட் செலவும் குறைகிறது