Sunday, August 11, 2013

உத்தரகாண்ட் மாநில பேரிடரும், “சிப்கோ” இயக்கமும்


மர அழிப்பிற்கு முக்கிய காரணம்  "நகர சிந்தனை"
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் (Cloud burst) ஜுன் மாதம்  ஏற்பட்ட தொடர்  மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கேதார்நாத், பத்ரிநாத். ஹரித்வார், ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், என்று வெள்ள பிரளயம்  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலைகள் உடைப்பு, ஆறுகளில் பெருவெள்ளம், பல கட்டிங்கள் இடிந்தது, ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகள் என்பவை  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பதில் ஜயமில்லை. ஒரு சம்பவம் நடந்தால் எப்படி, எப்போது என்று கேட்பதை விட, ஏன் என்று சிந்தித்தால் பிரச்சனையை எதிர்காலத்திலாவது எளிதாக கையாள முடியும்என்பார்கள்

வரலாற்று சிறப்புமிக்க கேதார்நாத் கோவில்
 வெள்ளப் பெருக்கில் ரிஷிகேஷ் சிவன் சிலை
இந்த பேரிடர் ( Disaster) ஏன்? என்ற கேள்வி விர்க்க முடியாததாக உள்ளது.  40 ஆண்டுகளுக்கு முன்பே சிப்கோ இயக்கம் தனது தொடர் போராட்டத்தால் இந்த பேரழிவை தடுக்க பல்வேறு இன்னல்களுக்கிடையே எடுத்த  முயற்சிதான் இந்த அளவிற்காவது குறைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. சிப்கோ இயக்கம் அதிகமாக பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இதன் சிறப்பு

சிப்கோ இயக்கம் பெண்களால் முன்னெடுக்கப்பட்டது 
மக்களின்  பங்களிப்பு  இயக்கத்தின் வெற்றி.
இந்த புண்ணிய பூமியை வரும் தலைமுறையினரும் வணங்கவும், பாதுகாக்கவும்  வேண்டுமானால் மரம் வெட்டுதலை தவிர்த்தல்,  மரம் வளர்ப்பு,    மலைகளை தாரை  வார்ப்பதை  தவிர்த்தல்  போன்றவை பயன் தரும்.

சிப்கோ இயக்கம் பற்றி மேலும் அறிந்து கொள்ள:

நிகமானந்தா கங்கையின் புனிதம் காக்க உயிர் துறந்த மகான்
http://www.maravalam.blogspot.in/2013/03/blog-post_22.html


4 comments:

Vaidheeswaran said...

சிப்கோ இயக்கம் இயற்கை வளத்தை தாய்மை உணர்வுடன் பாதுகாத்தது.

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர் பற்றிய என் பதிவைக் காண
http://vaidheeswaran-rightclick.blogspot.com/2013/07/blog-post.html

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவினைப் பார்த்தேன். நேர்த்தியாக செய்தி பகிர்ந்துள்ளீர்கள், வாழ்த்துகள்.

வேல் said...

இயற்கை பேரழிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். தங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.