Tuesday, June 5, 2012

2012 சுற்றுச்சுழல் தினமும் 'பசுமை பொருளாதாரமும்’


சுற்றுச்சுழல் தினக் கொண்டாட்டம் 40 ஆண்டுகளான நிலையில் பின்னோக்கிப் பார்த்தால் முதல் 25 ஆண்டுகள் இயற்கை வளங்களை சுரண்டியும், இரசாயன மருந்து மற்றும் உரங்கள் கொண்டு மாசுபடுத்தியும், நாடுகளுக்கும் இனங்களுக்கும் சண்டை ஏற்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்த கதைதான் அதிகம். இயற்கை நிலை வேறாக இருக்க மற்ற நாடுகள் உண்மைகள் அறிந்தவுடன் நிலைமை மாறுகிறது. மாற்றத்தின் விளைவு  இந்த ஆண்டு 2012 சுற்றுச்சுழல் தினம் 'பசுமை பொருளாதாரம்' என்னும் தலைப்பில் கொண்டாடவிருக்கிறோம். பசுமை பொருளாதாரம் (green economy) வரும் ஆண்டுகளில்   மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொல்லாக இருக்கப் போகிறது. இது வெறும் சொல்லாக இல்லாமல் ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்பட்டால் நிச்சயம்  அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான பூவுலகையும் அமைதியான வாழ்க்கையையும் தர முடியும்.

பசுமை பொருளாதாரம் (green economy) என்றால் ?? UNEP (United Nations Development Programme ) defines a green economy as one that results in “improved human well-being and social equity, while significantly reducing environmental risks and ecological scarcities” (UNEP 2010). மனித நலவாழ்வு மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடியதாகவும் சுற்றுச்சுழல் பாதிப்பு மற்றும் பற்றாக்குறையை தவிர்ப்பதாகவும் அமையக் கூடிய பொருளாதாரமே பசுமை பொருளாதாரம்கீழ்கண்ட  துறைகளைத் தேர்வு செய்து  ரியோ + 20 மாநாட்டில் கருத்துப் பரிமாற்றம் செய்யவுள்ளனர்.

இயற்கை வளங்களில் முதலீடு
1. வேளாண்மை
2. மீன் வளம்
3. தண்ணீர்
4. காடுகள்

சக்தி, மற்ற வளங்களின் திறனில் முதலீடு
5. எரிசக்தி
6. தொழில் துறை
7. குப்பை
8. கட்டிடங்கள்
9. போக்குவரத்து
10.சுற்றுலா
11. நகரங்கள்

பசுமை பொருளாதாரத்திற்கு மாற உதவுதல்
12. பசுமை மாதிரி திட்டங்கள் உருவாக்குதல்
13. சூழ்நிலைகளை உண்டாக்குவது.
14. பொருளுதவி

பொன்னும் பொருளும் விலையுயர்ந்த காரும், வீடும் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு உதவாது. சுத்தமான காற்றும் நீரும், வளமான மண்ணும் தான் தேவை. அதனை பாதுகாத்துத் தருவது நம் தலைமுறையின் கடமை.

மேல் அதிக தகவல்களுக்கு : http://www.unep.org/greeneconomy/GreenEconomyReport/tabid/29846/Default.aspx

6 comments:

Vetirmagal said...

The last paragraph , is the toughest one , sir :-)

வின்சென்ட். said...

நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனால் எல்லாம் முடிந்த பின் உணவு என்று வரும் போது இவைகளை உண்ண முடியாதே!!!!!

கலாகுமரன் said...

//பொன்னும் பொருளும் விலையுயர்ந்த காரும், வீடும் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்குப் உதவாது. சுத்தமான காற்றும் நீரும், வளமான மண்ணும் தான் தேவை. அதனை பாதுகாத்துத் தருவது நம் தலைமுறையின் கடமை.//

வாஸ்தவமான வார்த்தைகள்...!!

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

அனைவருக்கும் அன்பு  said...

அறிய தகவல்கள் நன்றி சார் ,........எனக்குள் ஆங்காங்கு சிதறி கிடந்த பள்ளியில் படித்த விசயங்களை ஒருமித்து பார்த்ததில் மகிழ்ச்சி ........

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.